பழனி அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை (அனைத்து சாதியினரும்) ஆரம்பம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ( சைவம் ) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ( சைவம் ) மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. ஓராண்டு சான்றிதழ் ( சைவம் ) படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு, தங்குமிடம் மற்றும் மாதம் ரூ. 3000/- ( ரூபாய் மூன்றாயிரம் மட்டும் ) உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியில் சேரும் மாணவர்கள் இந்து சமய கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வயது வரம்பு 14 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 6383031350 மற்றும் 7200544637 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கா. சாதிக் பாட்ஷா.