மாவட்டம்

வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் கார் மரத்தில் மோதி விபத்து

திண்டுக்கல் மேற்கு பகுதி திமுக செயலாளர் பஜ்லுல் ஹக் என்பவர் ஓட்டி வந்த கார் வேடசந்தூர், லட்சுமணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பஜ்லுல் ஹக் மகன் நூருல் அமீன் (12) உயிரிழந்துள்ளார். மேலும்,  காரில் வந்த சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூருல் அமீன் என்பவர் திண்டுக்கல் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பஷீர்அகமதுவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button