அதிமுக ஊழலுக்கு ஆதரவாக ஆஜரான திமுக வழக்கறிஞர்..!
அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுரை வக்ஃபு வாரிய கல்லூரியில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்ததில், அப்போதைய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், பாராளுமன்ற உறுப்பினரும் வக்ஃபு வாரிய தலைவருமான அன்வர் ராஜா, கல்லூரியின் செயலாளர் ஜமால் முகைதீன், ஷேக் அப்துல்லா, டாக்டர் அமானுல்லா, ஹச்.எம்.டி. கான், செய்யது உள்ளிட்ட நிர்வாகிகள் 71 நபர்களிடம் தலா 60 லட்சம் ரூபாய் வீதம் வசூலித்துக் கொண்டு பணியிடங்களை நிரப்பியுள்ளனர்.
இதுசம்பந்தமாக அப்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன்… அமைச்சராக உள்ள நிலோபர் கபில், பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா ஆகிய இருவரும் உயர் பதவியில் இருப்பதால், இந்த வழக்கை மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்தால் விசாரணை சரியாக நடைபெறாது. ஆகையால் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்பிறகு தமிழகத்தில் தேர்தல் வந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது இன்றைய முதல்வரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான முக ஸ்டாலின் பேசுகையில்… அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் திமுக ஆட்சி அமைந்ததும் கண்டிப்பாக சிறையில் அடைக்கப்படுவார்கள். யார் விட்டாலும் இந்த ஸ்டாலின் விடமாட்டேன் என்று பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார்.
இந்நிலையில் ஊழல் வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வக்ஃபு வாரிய கல்லூரின் செயளாலராக இருந்த ஜமால் முகைதீன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், தலைமை வழக்கறிஞருமான வில்சன் குற்றம் சாட்டப்பட்ட அதிமுக வினருக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடியுள்ளார்.
சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமா வழக்கின் தற்போதைய நிலையை எடுத்துக் கூறியதும் ஜமால் முகைதீன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.
திமுக வழக்கறிஞர் வில்சன் இதுவரை ஆஜரான எந்த வழக்கிலும் தோல்வியை சந்திக்காதவர் என திமுகவினர் மத்தியில் பெயரெடுத்தவர், ஆனால் ஊழல் செய்து தண்டனை பெற்ற தலைவியின் தலைமையிலான ஆட்சியில் நடைபெற்ற ஊழலுக்கு ஆதரவாக ஆஜராகி தோல்வியை சந்தித்ததோடு, திமுக தலைவரின் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டுள்ளார் என அறிவாலய வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.