சினிமா

“பவுடர் ஸ்டார்” நிகில் முருகனுக்கு “எம்.ஜி.ஆர் விருது” !

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு, நவின் ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில், சென்னையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு எம்ஜிஆர் பெயரில் விருது வழங்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் கலைத்துறையில் சாதனை நாயகனாகவும், பத்திரிகை தொடர்பாளராகவும் சிறந்த முறையில் பணியாற்றிவரும் “பவுடர் ஸ்டார்” நிகில் முருகனுக்கு சிறப்பு விருந்தினர் ஓய்வுபெற்ற நீதிபதி “எம்ஜிஆர்” விருது வழங்கி கௌரவித்தார். இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

இவ்விழாவிற்கு மூத்த பத்திரிகையாளர் கே.எம். சிராஜூதீன் தலைமை வகிக்க, இயக்குனர் பேரரசு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு எம்ஜிஆர் விருது வழங்கி கௌரவித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நவீன் ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பண்ணீர் செல்வம் சிறப்பாக செய்திருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button