யுவனின் கூடா நட்பால்.. நான் நிராகரிக்கப்பட்டேன், சீனுராமசாமி ஆதங்கம்

விஜய் சேதுபதி நடிப்பில் ஜுன் 24 வெளிவர இருக்கும் “மாமனிதன்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கதாநாயகன் விஜய் சேதுபதி, கதாநாயகி காயத்ரி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது…. இசைஞானி இளையராஜாவும் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். படத்தின் பாடல் பதிவின் போதும், பின்னணி இசை சேர்ப்பின் போதும் ஒரு இயக்குனராக என்னிடம் எதுவும் கேட்கவில்லை. என்னை அழைக்கவும் இல்லை. படத்தின் பாடல்கள் எழுதும் கவிஞர்கள் யாரும் என்னிடம் வரிகளை காண்பிக்க வில்லை.
இயக்குனராக என்னிடம் எதுவும் கேட்காமல் யுவன் ஷங்கர் ராஜாவும், இளையராஜாவும் தன்னிச்சையாக நடந்து கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது. இதற்கெல்லாம் யுவனின் கூடா நட்பால் தான் நான் நிராகரிக்கப்பட்டேன் என மிகவும் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார் .