திருப்பூர் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்…
திருப்பூர் பின்னலாடைக்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற நகரமாக திகழ்ந்து வரும் நிலையில் வீட்டு மனைகளாகவும், நிறுவனங்களாகவும் விளைநிலங்கள் மாறிவிட்ட நிலையில் திருப்பூர் மாநகரில் அங்கொன்றும், இங்கொன்றுமாக விவசாய நிலங்கள் தென்படுகின்றன.
இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்திற்குட்பட்ட கோவில்வழி பகுதியில் திருப்பூர் – தாராபுரம் பிரதான சாலையில் தனபால் மற்றும் தெய்வசிகாமணி ஆகிய இருவருக்கும்.சொந்தமான கோடிக்கணக்கான மதிப்பில் விவசாய நிலம் உள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு நீர்பாசனத்தின் கீழ் பாசன நீரை பயண்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் இங்கு முருங்கை, கீரை உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளனர். மேலும் இயற்கை முறை விவசாயத்தில் ஈடுபடும் திட்டத்திற்காக பல லட்சம் செலவு செய்து சில கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள எண்ணி ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் வசித்துவரும் இருவர் மாடுகளை வெட்டி ரத்தம் சொட்ட சொட்ட தனபால் மற்றும் தெயவசிகாமணிக்கு சொந்தமான விளை நிலத்திற்கு முன்பாக கொட்டகை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் மாட்டுக்கறி கழிவுகள்.மற்றும் எழும்புகளை விளை நிலத்தில் கொட்டிவிடுகின்றனர். இதனால் துற்நாற்றம் வீசுவதோடு விவசாயமும் பாதிக்கப்பட்டது. மேலும் மது அருந்திவிட்டு பாட்டில்களை விளைநிலத்தில் தூக்கி வீசி விடுகின்றனர்.
இதனால் விவாசாயம் செய்ய வரும் தொழிலாளர்கள் வேலைக்கு வர மறுப்பதோடு தங்களது விளை நிலத்திற்கு செல்லமுடியாமல் செய்வதோடு மிரட்டி வருவதாகவும், மீறி தங்களை கேள்வி கேட்டால் பிசிஆர் வழக்கு போட்டுவிடுவதாக மிரட்டி வருவதாக கூறியதை அடுத்து விவசாயிகள் தனபால் மற்றும் தெய்வசிகாமணி ஆகியோர் தங்களது விவசாய நிலத்தை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
விவசாயத்தை பாதுகாக்க போராடும் நிலையில் விவசாய நிலத்தை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– நமது நிருபர்