தமிழகம்
திடீரென பேரனை தனியாகச் சந்தித்த முதலமைச்சர் !

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி மீடியா சைன்ஸ் படித்து வருகிறார். படிப்பு சம்பந்தமாக ப்ராஜெக்ட் ஒர்க் காரணமாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தின் நிர்வாகத்தை கவணித்து வருகிறார்.
கலைஞர் தொலைக்காட்சி அலுவலகம் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் மாடியில் இயங்கி வருகிறது. கட்சியின் அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், தனது அறையிலிருந்து 12.40 மணிக்கு தனியாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் சென்று இன்பநிதியைச் சந்தித்து தனியாக பேசியிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் பேரன் இன்பா மீது மிகுந்த பாசம் கொண்டவர் என்பது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்த விஷயம்தான். எவ்வளவு பணிச்சுமைகள் இருந்தாலும், குடும்ப உறவுகளுக்கு நேரம் ஒதுக்கி கலந்துரையாடுவது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.