காவல் நிலையத்தில் இயற்கை முறையில் வாகன பாதுகாப்பு…! பாரி வள்ளலாக மாறிய காவல்துறை..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கேட் வே ஆஃப் மான்செஸ்டர் என அழைக்கப்படும் தொழில் நகரமாகும். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் கறிக்கோழி உற்பத்தி, விசைத்தறி, பின்னலாடை நிறுவனங்கள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் இத்தொழிலை நம்பி சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுள்ளனர்.
மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பல்லடத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பெரும்பாலும் நெடுஞ்சாலையில் உள்ள நகரப்பகுதிகளில் போக்குவரத்து போலீசாரின் தணிக்கையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிவது, போக்குவரத்து விதி மீறி வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் இருசக்கர வாகனங்கள் பல்லடம் காவல் நிலையத்தை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளன.
பெரும்பாலும் காவலர் குடியிருப்பு அருகே நிறுத்தப்படும் வாகனங்கள் பல மாதங்களாக நிறுத்தப்பட்பட்டு இருப்பதால் குடியிருப்பு பகுதிக்குள் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் எந்த வழக்குகளில் தொடர்புடையது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புல்லட்டில் கொடி படர்ந்து காட்யளிப்பது பல்லடம் போலீசாரின் மனித நேயத்தை வெளிப்படுத்துவதுபோல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் தேவையின்றி நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் உரிமையாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் குற்ற நடவடிக்கையில் தொடர்புடைய வாகனங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.