தமிழகம்

தேனியில் “ஸ்பா என்கிற மசாஜ்” : சீரழியும் இளைஞர்கள்..! கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!

தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியில் சட்டவிரோதமாக ஸ்பா என்கிற மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும், கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் இந்த ஸ்பா என்கிற பெயரில் மஜா (விபச்சாரம்) தொழில் நடத்தும் சமூக விரோதிகளின் செயல்களை தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் ஐ.பி.எஸின் பார்வைக்கு கொண்டு செல்லுங்களேன் என தேனி பகுதியில் உள்ள சமுக ஆர்வலர்களிடமிருந்து நமது அலுவலகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன. அதனை அலட்சியப்படுத்த விரும்பாமல் உடனடியாக நமது செய்தியாளர்கள் குழு தேனிக்குச் சென்று விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

டேங்கரா பிரவின் உமேஷ்

நமது செய்தியாளர்களுக்கு கிடைத்த தகவல்கள் அனைத்தையும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவருமான டேங்கரா பிரவின் உமேஷ், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஐபிஎஸ் ஆகியோரின் பார்வைக்கு அப்படியே சமர்ப்பிக்கிறோம்.

தேனி நகரத்தில் தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடத்த முடியாது என்பதால் மசாஜ் சென்டர்கள் என்கிற பெயரில் கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் குறிவைத்து விபச்சாரத் தொழில் படுஜோராக நடந்து வருகிறதாம். மேலும் தேனி நகர் காவல் நிலையம், அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரியும் சில காவலர்கள் இதற்கு உடந்தையாக செயல்படுவது தான் கொடுமையிலும் கொடுமை என்கிறார்கள்.

அஸ்ரா கார்க் ஐபிஎஸ்

பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் உதயமான லாட்ஜ், தேனி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இண்டர்நேஷனல் லாட்ஜ், அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தென்றல் காலனி ஆகிய இடங்களில் ஸ்பா என்கிற மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறதாம். இந்த மசாஜ் சென்டர்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களிடம் பவுடர் மசாஜ், ஜெல் மசாஜ், ஆயில் மசாஜ் ஐட்டங்கள் இருப்பதாக கூறி பேரம் பேசுவார்களாம். பின்னர் நுழைவுக் கட்டணமாக ஆளுக்குத் தகுந்தவாறு பணத்தை வசூலித்துக் கொண்டு உள்ளே அனுப்புவார்களாம். அறைக்குள் செல்லும் வாடிக்கையாளர்களின் முன்பு அறைகுறை ஆடையில் ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் காட்சியளித்து வரவேற்பார்களாம்.

தனக்குப் பிடித்த பெண்ணை கைகாட்டி தேர்வு செய்ததும், அந்தப் பெண் தனி அறையில் மசாஜ் செய்யத் தொடங்குவாராம். வந்த நபர் இன்பத்தின் உச்சிக்கு செல்லும் போது… அந்தப் பெண் எக்ஸ்ட்ரா சர்வீஸ் என்ன வேண்டும் ? சார்.. என கொஞ்சலாக கேட்பாராம். பின்னர் டாப்லெஸ் 2 ஆயிரம் ரூபாய், ஆப்நூடு 3 ஆயிரம் ரூபாய், புல்நூடு 4 ஆயிரம் ரூபாய், பாடி டூ பாடி 5 ஆயிரம் ரூபாய் என சர்வீஸ் சார்ஜ் பட்டியலைக் கூறுவாராம்.

மசாஜ் சென்டருக்கு உண்மையிலேயே உடல்வலியை போக்கலாம் என வருகை தரும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அல்ப ஆசைக்காக வரும் முதியவர்களையும் மசாஜ் என்கிற பெயரில் மஜாவை மட்டும் காண்பித்து விபச்சாரத் தொழில் செய்வதோடு, இந்த மசாஜ் சென்டர்களை இடையூறு இல்லாமல் நடத்துவதற்காக உள்ளூர் ரவுடிகளையும், காவல் நிலையங்களில் உள்ள சிலரையும் தன்வசப்படுத்தி வைத்துள்ளாராம் ஜெகஜால கில்லாடியான மசாஜ் சென்டர்களின் உரிமையாளர். இந்த ஜெகஜால கில்லாடிக்கு சில மீடியா நபர்களும் துணை போகிறார்களாம்.

மேலும் இதே கும்பல் காரைக்குடியில் பெண்கள் விடுதி என்கிற பெயரிலும், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் மசாஜ் சென்டர்கள் என்கிற பெயரிலும் புதிய கிளைகளை துவங்கி இதேபோல் அங்கும் விபச்சார தொழில் நடைபெறுவதாக கூறுகிறார்கள். இதற்கிடையில் தேனியில் மேலே கூறப்பட்டுள்ள உதயம் பேக்கரி அமைந்துள்ள கட்டிடத்தில் ஸ்பா நடத்திய பெண் ஒருவரும் வழக்கறிஞர் என்கிற பெயரில் நாகர்கோவிலில் இருந்து ஒருவரும் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் ஸ்பா சென்டருக்கு வழக்கறிஞர் வந்தபோது பணம் கேட்டதால் காவல்துறையினர் சிலர் மூலம் அந்த ஸ்பா சென்டரை மூடியதாகவும் அந்த வழக்கறிஞர் பேசியுள்ளார்.

இதெல்லாம் தேனி நகர காவல்துறையினருக்கு தெரியாமலா நடந்து கொண்டிருக்கிறது? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் பணத்தைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கிறார்களா? என்கிற சந்தேகம் இருப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

ஸ்பா என்கிற பெயரில் மஜா (விபச்சாரம்) சென்டர்களை திரைமறைவில் நடத்திவரும் சமூக விரோதிகளை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டேங்கரா பிரவின் உமேஷ், ஐபிஎஸ், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், ஐபிஎஸ் ஆகியோர் தனிப்படை அமைத்து தேனியில் ஸ்பா என்கிற மசாஜ் போர்வையில் மஜா (விபச்சாரம்) தொழில் நடத்திவரும் நபர் மற்றும் அவருக்குத் துணைபோகும் நபர்கள் யார்..? யார்..? என்பதை இனம்கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வுபெற்ற தேனி மாவட்ட தலைமைக் காவலர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button