தமிழகம்

பல்லடம் அருகே விபத்தில் காயமடைந்தவரை தாக்கிய பள்ளி நிர்வாகம்.! செய்தியாளரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் – திருப்பூர் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். இதனிடையே புள்ளி வளாகத்தில் இருந்து பெற்றோர் ஒருவர் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தையை அழைத்துவந்த மாணவரின் தந்தைக்கு காலில் ரத்தக்காயம் அடைந்தார்.

காயமடைந்த மாணவரின் தந்தை

மேலும் எதிரே பைக்கை ஓட்டி வந்த சஞ்சய் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனிடையே அங்கிருந்த இருவர் சஞ்ஜய்யை சரமாரியாக தாக்கி பள்ளி வளாகத்திற்குள் இழுத்துச் சென்றனர். பின்னர் சஞ்ஜய்யின் பைக்கையும் பூட்டி சாவியை எடுத்து வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே படுகாயமடைந்த பெற்றோரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

காயமடைந்த சஞ்ஜய்

இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்தில் செய்தி சேகரிக்கச்சென்ற நாளிதழ் செய்தியாளரை தனியார் பள்ளியை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டதோடு சாலையில் நடந்த விபத்தை படம் எடுக்க கூடாது என மிரட்டியள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்து பள்ளி வளாகத்தில் இருந்த சஞ்ஜய்யை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த தனியார் புள்ளி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதே பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த ரீனா கிருஷ்டி என்பவரை மனிதாபமானமற்ற முறையில் பள்ளி வளாகத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக காவல்துறையில் புகார் அளித்த சம்பவமும் அரங்கேரியுள்ளது. இதனிடையே விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button