பரமக்குடியில் கோயிலில் உழவாரப்பணி மேற்கொண்ட மாணவிகள்
தமிழகம் முழுவதும் 29ஆம் தேதி முதல் நவம்பர் நான்காம் தேதி வரை பள்ளி கல்வித்துறை சார்பாக நாட்டு நலப்பணித் திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி பரமக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கடந்த 29ஆம் தேதி அன்று நாட்டு நலப்பணித்திட்ட முகாம் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டம் முழுவதும் துவங்கியது.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியை திருமதி சரோஜா உதவி தலைமை ஆசிரியை இளமதி ஆகியோர் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட பொறுப்பாளர் திருமதி ஜோதிலட்சுமி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வின் நான்காம் நாளான இன்று பரமக்குடி ஆயிர வைசிய சபைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளின் மூலம் உழவாரப்பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் அறங்காவலர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.