அரசியல்இந்தியா

“உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்” :சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு கருதி போலீசார், இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்நிலையில் கனகதுர்கா தனது கணவரின் வீட்டுக்கு காலை சென்றார். அப்போது சபரிமலை சென்றது தொடர்பாக கனகதுர்காவுக்கும், அவர் மாமியாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கனகதுர்காவை அவரது மாமியார் சுமதியம்மா சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாமியார் மீது போலீஸில் புகார் செய்தார்.

 இந்நிலையில் தன்னை கனகதுர்கா கடுமையாகத் தாக்கியதாகக் கூறி மாமியாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சபரிமலையில் தரிசனம் செய்து வந்த கனகதுர்காவும் பிந்துவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button