பத்திரிகை தொடர்பாளர் “டைமண் பாபு”க்கு கௌரவ டாக்டர் பட்டம்
தமிழ் திரையுலகில் பத்திரிகை தொடர்பாளராக தனது கலைப் பயணத்தை தொடங்கி பிரபலங்களின் அன்பைப் பெற்று, பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் தலைவராக சிறப்பாக பணியாற்றிவரும் “டைமண் பாபு”க்கு குளோபல் அச்சீவர்ஸ் நிறுவனம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
இவர் 1986 ஆகஸ்ட் 15ஆம்தேதி இயக்குனர் ஆபாவானன் இயக்கத்தில் வெளியான “ஊமை விழிகள்” படத்தின் மூலம் பத்திரிகை தொடர்பாளராக அறிமுகமாகி தற்போது கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த “விக்ரம்” படம் இவருக்கு 600 வதுபடம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இளைய திலகம் பிரபு, விக்ரம் பிரபு ஆகிய மூன்று பேருக்கும் பத்திரிகை தொடர்பாளராக பணியாற்றி சிவாஜி கணேசன் குடும்பத்தின் மூன்று தலைமுறையினர் அன்பை பெற்றுள்ளார்.
மேலும் கலைஞானி கமல்ஹாசனின் பத்திரிகை தொடர்பாளராக பணியாற்றி கமலின் அன்புக்குறியவராகவும், தமிழ் மட்டுமல்லாது, இந்திய திரையுலக பிரபலங்களின் அன்புக்குரியவராகவும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய செய்தி அறிந்து திரை பிரபலங்களும், பத்திரிகையாளர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.