சினிமா
சிறிய முதலீட்டில் தரமான படங்களை தயாரிக்கும் “செ பிக்சர்ஸ்” நிறுவனம்
செ பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் சிறிய முதலீட்டில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் முதல் படியாக அறிமுக இயக்குனர் தினேஷ் தீனதயாளன் இந்நிறுவனத்தின் முதல் படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிறுவனத்தின் துவக்க விழா ரோஸ் வாட்டர் எனும் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் நகைச்சுவை நடிகர் சதிஷ், நடிகர்கள் சௌந்தரராஜன்,தளபதி தினேஷ், பெசன்ட் நகர் ரவி, இயக்குனர் விஜய் ஆதிராஜ், நடிகர்கள் மாரிமுத்து, அபிஷேக், திலிபன், உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர் . இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் செ பிக்சர்ஸ் செல்வகுமார் முத்து , புகழேந்தி , உமா புகழேந்தி ஆகியோர் வரவேற்றனர்.