சினிமா

திரில்லர் நாயகன் அருள்நிதி யின் “தேஜாவு” பட விமர்சனம்

அருள்நிதி நடிப்பில் ஜூலை 22 ஆம் தேதி வெளியாக இருக்கும் “தேஜாவு” திரைப்படத்தை நீண்ட காலமாக பத்திரிகையாளராக இருந்த அரவிந்த் சீனிவாசன் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மதுபாலா, காளி வெங்கட், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தில் டிஜிபி மதுபாலா வின் மகள் கடத்தப் படுகிறார். கடத்தப் பட்ட பெண் காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுக்கும் போது எழுத்தாளர் ஒருவரின் பெயரை கூறுகிறார். அந்த எழுத்தாளரை விசாரிக்கையில், அவரது கதையில் வரும் சம்பவங்கள் நிகழ் காலத்தில் நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடத்தப்பட்ட பெண்ணை  மீட்பதற்காக சிறப்பு அதிகாரியாக கதாநாயகன் அருள்நிதி ( அன் அபிசஷியலாக ) வரவழைக்கப்படுகிறார். சிறப்பு அதிகாரி அருள்நிதி யின் நடவடிக்கைகளை எழுத்தாளர் எழுதும் போது, எழுத்தாளருக்கும் கடத்தல் சம்பவத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக உணர்கிறார் அருள்நிதி.

டிஜிபி யின் மகள் கடத்தப் பட்ட சம்பவத்திற்கும், கதை எழுதுவது கற்கும் என்ன சம்பந்தம் ? யார் எதற்காக டிஜிபி யின் மகளை கடத்துகிறார்கள் ? அவர்களை அருள்நிதி கண்டுபிடித்தாரா ? என்பது மீதிக்கதை.

அருள்நிதி நடிப்பில் இதற்கு முன் வெளிவந்த “D பிளாக்” திரைப்படம் சரியாகப் போகாத குறையை “தேஜாவு” நிறைவு செய்யும் என்றுதான் சொல்ல வேண்டும். தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார் அருள்நிதி. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மதுபாலாவிடம் போலீஸுக்கான  கம்பீரம் சற்று குறைவாகவே காணப்படுகிறது. சில இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங். மற்றபடி அருள்நிதிக்கு இந்தப் படம் நல்ல படமாகவே இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

பத்திரிகையாளராக இருந்து பல்வேறு படங்களை விமர்சனம் செய்து, இன்று இயக்குனராக தனது பயணத்தை தொடங்கியுள்ள அரவிந்த் சீனிவாசனுக்கு வாழ்த்துக்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button