தமிழகம்
திருட்டு மணலைத் திருடிச் சென்ற மர்மநபர்கள்.. பரமக்குடியில் பரபரப்பு

பரமக்குடியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த திருட்டு மணலை மர்ம நபர்கள் திருட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கஞ்சியேந்தல் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பத்து டாரஸ் லாரிகளில் திருட்டுத்தனமாக கொண்டுவரப்பட்ட சுமார் 60 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மணல் அதே கிராமத்தில் உள்ள வயல்வெளியில் கொட்டி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஜூலை 10 ஆம் தேதி இரவு அந்த மணலை மர்ம நபர்கள் லாரிகளில் திருடி தப்பி ஓடிவிட்டனர். வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த திருட்டு மணலை மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் தற்போது அந்த மணல் திருடப்பட்டிருப்பது என்பது முதற்கட்ட விசாரணையில் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
