பாவம் செய்யாதிரு மனமே “இரவின் நிழல்” விமர்சனம்
நடிகர் பார்த்திபன் ஆரம்ப காலத்தில் இருந்து சினிமாவை வித்தியாசமான கோணத்தில் கையாளும் இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் தற்போது சினிமாத்துறையில் இதுவரை யாருமே செய்யாத ஒரே சாட்டில் “இரவின் நிழல்” படத்தை எடுத்து இரண்டு சர்வதேச விருதுகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
ஒரு சிறுவன் பிறந்ததிலிருந்து இறுதி வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் அவன் பட்ட கஷ்டங்களை சொல்லும் கதை தான் இந்தப் படம். அதிலும் அவனுடைய பத்தாவது வயதில் கஞ்சா விற்பனை செய்யும் இடத்தில் அவன் சந்திக்கும் மனிதர்களும், வித்தியாசமான சம்பவங்களும் அவன் மனதை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், பசியும் மனம் சார்ந்த பிரச்சனையும் ஒருவனை எவ்வாறு விரட்டுகிறது என்பதையும் அற்புதமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.
படத்தில் “பாவம் செய்யாதிரு மனமே” என்ற பாடல் படம் பார்க்கும் அனைவரும் முனுமுனுக்கும் பாடலாக அமைந்துள்ளது. “மாயவா தூயவா” என்ற பாடலும் அற்புதம். இந்த படத்திற்காக இரண்டு ஆண்டுகள் செலவு செய்துள்ளார். அரங்குகள் அமைத்து, நடிகர், நடிகைகள் தொண்ணூறு நாட்கள் பயிற்சி செய்துள்ளனர். ஒரு படைப்பாளனாக, இயக்குனராக, நடிகராக அனைத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் பார்த்திபன்.