சினிமா

லிங்குசாமியின் கடனுக்காக, தயாரிப்பாளர் பாதிக்கப் படலாமா ? “வாரியார்” விமர்சனம்

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள “வாரியார்” திரைப்படம்  வித்தியாசமாக இருக்கும் என திரையுலகினர் எதிர் பார்த்தனர். ஆனால் படம் பார்க்கும் அனைவரது எண்ணங்களிலும் மண்ணை தூவியுள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

அவரது “ரன்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் வெளிவந்த ஒவ்வொரு காட்சிகளையும் ஒன்றாகச் சேர்த்து “வாரியார்”  திரைப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார். ஏற்கனவே சில வருடங்களாக படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் சும்மாதானே இருந்தார், அப்போது நல்ல கதையை யோசித்திருக்கலாமே என்ற சந்தேகம் சினிமாத் துறையினர் அனைவருக்கும் எழுந்துள்ளது.

அப்போது சிலர் பேசுகையில்… சில வருடங்களாக லிங்குசாமி எண்பது கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையால் தத்தளித்து வருகிறாராம். கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெறிக்கும் சமயத்தில் ஆந்திரா தயாரிப்பாளர் ஒருவர் சிக்கியிருக்கிறார். இது தான் சமயம் இவர் தலையில் மிளகாய் அரைத்து விடலாம் என இந்த கதையை தயார் செய்திருக்கிறார். இவருக்கு இந்தப் படத்திற்கு ஏழு கோடி சம்பளம் பேசியிருக்கிறார். அதில் ஆறு கோடி ரூபாய் கடன் கொடுத்தவர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக கொடுப்பதற்கு சம்மதம் தெரித்திருந்தாராம். ஆனால் சொன்னது போல் நடந்து கொள்ளாமல் இரண்டு கோடி மட்டுமே கொடுத்து இவரது தில்லாலங்கடி வேலையை காட்டியுள்ளாராம். சரி அவரது சொந்தப் பிரச்சனை நமக்கெதற்கு,

லிங்குசாமி ஆரம்பத்தில் இயக்கிய நான்கு படங்கள் மட்டுமே வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்திருந்தது. அதன் பிறகு மண்டையில் சரக்கு இல்லாததால் மாற்று மொழிப் படங்களை வாங்கி இயக்கத் தொடங்கினாராம். கடன் பிரச்சினையை சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கும் போது கதையை யோசிக்க நேரம் எப்படி இருக்கும் என்கிறார்கள்.

லிங்குசாமி சரியான திட்டமிடல் இல்லாமல் சொந்தப் படம் தயாரித்து கடன்காரன் ஆனார். அதேபோல் மற்ற தயாரிப்பாளர்களும் கடன்காரர்கள் ஆகாமல் இருக்க வேண்டுமானால் இவர் படம் இயக்காமல் இருப்பதே நல்லது. இல்லையேல் சரியான உதவி இயக்குனர்களை வைத்து கதை விவாதம் செய்து படம் இயக்கலாம் என பெரும்பாலானவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

சமீப காலமாக பெரிய பட்ஜெட் படங்களை வாங்கி வெளியிடும் “ரெட் ஜெயன்ட் மூவிஸ்”  ஆரம்பத்தில் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் படத்தை பார்த்த பிறகு மௌனமாக எதுவுமே சொல்லாமல் கிளம்பி விட்டார்களாம் “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” முகவர்கள். மொத்தத்தில் “வாரியார்” படத்தை எதிர்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றமே.

படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர். நடிகர் சிம்புவின் குரலில் வெளியாகியுள்ள புல்லட் பாடல் சிறப்பு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button