சினிமா

உளவியல், த்ரில்லர் கதையில் அசோக் செல்வனின் மாறுபட்ட தோற்றத்தில் “வேழம்” திரைப்படம் ஜூன்-24 வெளியீடு

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில்,  கே-4 கிரியேஷன்ஸ் சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “வேழம்”. இந்தப் படம் ஜுன் 24 திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்  படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

இவ்விழாவினில்
பாடலாசிரியர் தீபிகா பேசுகையில்..,
சந்தீப் எனது பள்ளி நாட்களில் இருந்தே நெருங்கிய நண்பர், இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு வரிகள் எழுத அவர் எனக்கு வாய்ப்பளித்தது மிகவும் மகிழ்ச்சி. இசையமைப்பாளர் ஜானு சந்தர் எங்கள் வகுப்புத் தோழரும் கூட. நண்பர்களுடன் இணைந்து வேலை பார்த்தது  ஒரு அற்புதமான அனுபவம். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் கேசவன் சாருக்கு நன்றி.

நடிகர் ஷாம் சுந்தர் பேசுகையில்..,
நான் பிரான்சிஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இயக்குனர் சந்தீப்புடன் சில குறும்படங்களில் பணிபுரிந்துள்ளேன், அவருடைய  முதல் திரைப்படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் தர வேண்டுமென எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பேன்.  என்னைப் போன்ற ஒரு புதுமுகத்திற்கு, எனது சக நடிகர்களான ஜனனி, ஐஸ்வர்யா ஆகியோர் உறுதுணையாக இருந்ததற்கு நன்றி என்றார்.

இதுகுறித்து இசையமைப்பாளர் ஜானு சந்தர் பேசுகையில்…, 
பைரவா, காலா போன்ற படங்களுக்கு நான் கிடார் வாசித்துள்ளேன். இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்த சந்தீப்பிற்கு நன்றி. நடிகர்கள் அசோக் செல்வன், ஜனனி, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பை அருகிலிருந்து பார்த்து வியந்தேன். இந்தப் படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பை அளித்ததற்கு  தயாரிப்பாளர் கேசவன் சாருக்கு நன்றி கூறுகிறேன். பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் எனது திறமையை வெளிக்காட்ட நல்ல ஸ்கோப் இருந்தது. அனைவரும் பார்த்து ரசிக்கும் நல்ல படமாக வேழம் திரைப்படம் இருக்கும். நன்றி என்றார்.

நடிகை ஜனனி பேசுகையில்,
பொதுவாக புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றும்போது சில அசௌகர்யம், சந்தேகம் இருக்கும். ஆனால், இயக்குனர் சந்தீப் ஷ்யாம் அதில்  விதிவிலக்காக மிக அற்புதமான உழைப்பாளியாக இருந்தார். அசோக்கும் நானும் தெகிடியில் இணைந்து பணியாற்றியுள்ளோம்,  இப்போது மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளோம். இந்தப்படத்தின் சில காட்சிகளை நான் பார்த்திருக்கிறேன், அது நன்றாக வந்திருக்கிறது. பொதுவாக இரண்டு நடிகைகள் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணிபுரியும் போது  நடிகைகளுக்குள் சில சச்சரவுகள் இருக்கும்  என்று ஒரு தவறான கருத்து உள்ளது, ஆனால் அது உண்மையல்ல. நானும் ஐஸ்வர்யாவும் மிக நல்ல நண்பர்களாக பழகினோம். ஜானுவின் இசையமைப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். அவரிடமிருந்து எனக்கு ஒரு நல்ல பாடல் கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் பேசுகையில்..,  லீனா என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன், இது ஒரு அழுத்தமான கதாபாத்திரம்.  அசோக் செல்வன் ஒரு சிறந்த நடிகர், எங்கள் கெமிஸ்ட்ரி அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஜனனியுடன் எனக்கு போர்ஷன்கள் இல்லை, ஆனால் அவர் மிக இனிமையான நபர். இயக்குநர் ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட், அவர் இந்த திரைப்படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் ஒரு தீவிரமான உளவியல் த்ரில்லர்.  சிறந்த தொழில்நுட்பக் குழு இணைந்து உருவாக்கியுள்ளார்கள், ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை இப்படம் வழங்கும் என்றார்.

பின்னர் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button