சினிமா

மருத்துவ மாணவர்கள் முன்னிலையில் “ஜோதி” படத்தின் பாடலை வெளியிட்ட படக்குழு

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 43 இடத்தில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான “ஜோதி” திரைப்படத்தின் முதல் பாடல் “போவதெங்கே”  SRM  கல்லூரியில் ஆயிரம் மருத்துவ மாணவர்கள்  முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் ராஜா சேதுபதி பேசுகையில்… சதுரங்க வேட்டை  படத்தொகுப்பாளராகிய நான் இந்த படத்தை தயாரித்தற்கு முக்கிய காரணமே சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் சதுரங்க வேட்டை படத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கப்பட்டது, அதுபோலவே ஜோதி படத்தின் கரு சாமானிய பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டிருந்ததால் சமூக அக்கறை உள்ள நல்ல திரைப்படங்களை மக்கள் எப்போதும் கைவிட்டது இல்லை. இதன் கருவும், நடந்த சம்பவமும், இதன் பின்னணியும் என் தூக்கத்தை தொலைத்தது. இதனால் ஜோதி திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன். என்று கூறினார்.

அதன்பிறகு இயக்குனர்   கிருஷ்ண பரமாத்மா பேசும்போது… சமூக அக்கறை கொண்ட கதை கருவை விறுவிறுப்பான திரைக்கதை, எதார்த்தமான வசனங்கள் என  “ஜோதி ” திரைப்படம் எமோஷனல்  கலந்த கிரைம் திரில்லராக  வந்திருக்கிறது. இப்படத்தின் முதல் பாடல் போவதெங்கே பாடலை மருத்துவ மாணவர்கள் முன்னிலையில் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இந்தப் படத்தின் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது…. இந்தப் படத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு, எனது சொந்த வாழ்வின் நிகழ்வை இப்படம் பிரதிபலிப்பதால் அனைத்து பாடல் வரிகளும் மிகவும் ஆழமாகவும், அர்த்த முள்ளதாகவும் அமைக்க முடிந்தது. படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் என் வரிகளுக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது என உணர்ச்சி பொங்க பேசினார்

இந்நிகழ்ச்சியில் அனைத்து  மருத்துவ மாணவர்கள் முன்னிலையில், படத்தின் முதல் பாடல் காட்சி திரையிடப்பட்டது. அதன்பின்
மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று படத்தின் முதல் பத்து நிமிட காட்சியை மாணவர்களுக்கு திரையிடப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button