சினிமா

“யாணை” வெளியிடுவதில் சிக்கல்..?..!

தமிழ் திரையுலகில் வியாபார ரீதியாக பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி, தற்போது அவரது மைத்துனர் அருண் விஜயை நாயகனாக வைத்து இயக்கியுள்ள படம் “யாணை” இந்தப் படம் வருகிற 17ஆம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவித்திருந்தனர். அதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது. படத்தின் விளம்பர பணிகளில் இயக்குனர் ஹரி தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் வருகிற 17 ஆம் தேதி போனி கபூர் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி நடித்து இயக்கியுள்ள “வீட்ல விசேஷம்” வெளியாகிறது. இந்தப் படத்திற்கு தியேட்டர்களை ஒதுக்க திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் திட்டமிட்டுள்ளனர். மேலும் கடந்த வாரம் வெளியான “விக்ரம்” திரைப்படம் 400 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்றளவும் மக்கள் கூட்டம் அழை மோதுகிறது. “வீட்ல விசேஷம்” படத்திற்கு தியேட்டர்களை ஒதுக்க வில்லை என்றால் போனி கபூர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் அஜித் படம் நமக்கு கிடைக்காது என விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் “யாணை” படத்திற்கு தியேட்டர்களை ஒதுக்க தயங்குகின்றனர்.

இது சம்பந்தமாக விசாரித்த போது… “யாணை” திரைப்படத்தை தற்போது வெளியிட வேண்டாம் என விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தி வருகிறார்களாம். ஹரி, அருண் விஜய் உள்ளிட்ட படக்குழுவினரும் இது சம்பந்தமாக ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது. ஆகையால் 17 ஆம் தேதி வெளியிட இருந்த “யாணை” ஜூலை மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button