பிரதருக்கு வந்த பிரச்சினை ! தப்புவாரா இயக்குநர் ராஜேஷ் !.?
நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள “பிரதர்” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் ராஜேஷ் சமீபத்தில் இயக்கிய படங்கள் சரியாக வசூல் செய்யாததால் அந்தப் படத்திற்கு தியேட்டர் ஒதுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். அதே தேதியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “அமரன்”, கவின் நடித்துள்ள “ப்ளடி பெக்கர்” படங்களுக்கு தியேட்டர் ஒதுக்க ஆர்வம் காட்டி வருகின்றார்களாம்.
பிரதர் படம் வியாபார ரீதியாக வரவேற்பு இல்லாத காரணத்தால், தயாரிப்பாளர் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் தஞ்சம் அடைந்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் பேசி வருகின்றனர். இந்தப் படம் வியாபார ரீதியாக வரவேற்பு பெறவில்லை என்றால், எனது சினிமா வாழ்க்கை அவ்வளவுதான், இது எனக்கு வாழ்வா சாவா பிரச்சினை, என இயக்குநர் ராஜேஷ் நெருங்கிய வட்டாரத்தில் புலம்பி வருகிறார் என்கிறார்கள்.
இதேபோல் தயாரிப்பாளர் பூமியும் கடன் பிரச்சினை காரணமாக சில காலம் சினிமா பக்கம் வராமல், பில்டர் வேலையை கவனித்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். ஜெயம் ரவி நடித்துள்ளதால் முதலுக்கு மோசம் வராது என்கிற நம்பிக்கை அவருக்கு இருக்கிறதாம். எது எப்படியோ சினிமாவை நேசிப்பவர்கள் யாரையும், சினிமா கைவிடாது, என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல்…