தனி விமானத்திற்கு அனுமதி வழங்கியதே
ஒன்றிய அரசுதானே…
வரலாறு தெரியாமல் பேசும் அண்ணாமலை..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்தார். முதல்வரின் துபாய் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வரின் துபாய் பயணம் குடும்பச் சுற்றுலா என கொச்சைப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு திமுகவின் ஆர்.எஸ்.பாரதி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார். அண்ணாமலை கூறிய அதே கருத்தை முன்னாள் முதல்வர் பழனிச்சாமியும் கூறியிருந்தார்.
முதலமைச்சர் வெளிநாடு செல்லும்போது அதிகாரிகள் உடன் செல்வது நடைமுறை வழக்கம்தான். முதல்வரின் ஆரோக்கியத்தை பேணிக்காக்க அவரது குடும்பத்தினர் உடன் சென்றனர். இது பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டிலிருந்து முதல்வர்கள் வெளிநாடு சென்றபோது அவர்களின் குடும்பத்தினர் உடன் சென்றிருக்கிறார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசியலும், வரலாறும் தெரியாமல் பேசியுள்ளார். அண்ணாமலை பேசிய பிறகு திமுக சார்பில் முதல்வரின் துபாய் பயண செலவு ஒரு கோடி எனவும் அதனை திமுக கொடுத்ததாகவும் விளக்கமளித்துள்ளனர்.
முதல்வர் துபாய் பயணம் மேற்கொண்ட சமயத்தில் அயல்நாட்டு விமானப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. உள்நாட்டு விமான பயணத்திற்கு மட்டும்தான் மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இது அண்ணாமலைக்குத் தெரியாதா? நன்கு தெரிந்திருந்தும் தமிழகத்தில் திமுகவுக்கு அடுத்து முதல்வர் துபாய் பயணம் மேற்கொண்ட சமயத்தில் அயல்நாட்டு விமானப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. உள்நாட்டு விமான பயணத்திற்கு மட்டும்தான் மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இது அண்ணாமலைக்குத் தெரியாதா? நன்கு தெரிந்திருந்தும் தமிழகத்தில் திமுகவுக்கு அடுத்து பாஜகதான் என்பதை காட்டிக் கொள்வதற்காக சர்ச்சையான பேச்சுக்களை பேசிவருகிறார். தனி விமானம் என்பது மிகவும் குறைந்த இருக்கைகள் கொண்ட விமானம் தான் முதல்வர் சென்ற விமானம். மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று தனி விமானத்திற்கான தொகையை முன்கூட்டியே செலுத்திய பிறகு பயணம் செய்பவர்களின் பட்டியலையும் முன்கூட்டியே பெற்றுக் கொண்டுதான் விமான போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கி இருக்கிறது. இதெல்லாம் காவல்துறையில் உயர்பதவியிலிருந்த அண்ணாமலைக்குத் தெரிந்தும் விதண்டாவிதமாக பேசவேண்டும் என்பதற்காக பேசியிருக்கிறார். இதற்கு ஆர்.எஸ்.பாரதி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
தொழில்துறை அமைச்சர் தவிர மற்ற துறை சார்ந்த அமைச்சர்கள் ஏன் துபாய் செல்லவில்லை என முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பேசினார். முதல்வரின் பயணம் என்பது துபாய் எக்ஸ்போவில் தமிழக அரங்கை திறந்து வைப்பதற்காகத்தான். பழனிச்சாமி வெளிநாடு சென்றபோது தேவையில்லாமல் தனக்கு வேண்டிய அதிகாரிகள் பட்டாளத்தை அழைத்துச் சென்றார். முதல்வர் துபாய் சென்றபோது சிறிய முதலீட்டாளர்கள் கலந்து கொண்டு முதலீடு செய்ய முன்வந்துள்ளார்கள். பழனிச்சாமி வெளிநாடு சென்றபோது போட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளதா என்றால் அது கேள்விக்குறிதான்.
முதல்வரின் உடல் நலனை கவனித்துக் கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் அவருடன் செல்வது தவிர்க்க முடியாதது. துபாய் பயணத்தில் விமான கட்டணத்தை திமுக செலுத்திவிட்டது. துபாயில் தங்குவது போன்ற பிற செலவுகளையும் துபாய் அரசாங்கம் தமிழக முதல்வரை விருந்தினராக அழைத்ததால் துபாய் அரசே செலவு செய்துள்ளது. இதில் அண்ணாமலை கூறியதுபோல் மக்களின் வரிப்பணம் எங்கே செலவழிக்கப்பட்டிருக்கிறது. வளைகுடா நாடுகளில் தமிழர்கள் ஏராளமானோர் வசிக்கிறார்கள். வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் மதிப்பு ஏராளம். இதனால் தமிழகத்தின் பொருளாதாரத்தை அவர்களும் ஒருவகையில் உயர்த்துகிறார்கள். அவர்களையும் முதல்வர் ஊக்கமளித்துள்ளார்.
இதுபோன்ற சூழ்நிலையில் அண்ணாமலை போன்றவர்கள் அரசியல் மட்டுமே செய்துள்ளார். இவர் நினைப்பது போல் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட வில்லை. இவரது கனவு நனவாக இன்னும் மூன்று சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்ற பின் நடந்தாலும் நடக்கலாம். இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்பதே நிதர்சனம்.