வியாபார சந்தையாக மாறும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்
ஒடிசா மாநில உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் தன்னை ‘மைலார்ட்’ என்று அழைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்தை, நன்றாக நினைவிருக்கிறது, 1982ல் அன்றைக்கு கே.பி.என்.சிங் தலைமை நீதிபதியாக (பீகார் மாநிலத்தவர்) தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்தார். அதற்கு முன் எம்.எம்.இஸ்மாயில் வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாறுதல் ஆகி விட்டதால், அவர் ஏற்காமல் கண்டித்து அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். சிலகாலம் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்தார்.
அப்போது இதே சர்ச்சையில் ‘சார்’ என்று அழைக்கலாம் என்று ஒரு சூழல் வந்தபோது பி.எச்.பாண்டியன் அன்றைய சட்டப் பேரவையின் துணைத் தலைவராக இருந்தார். ‘சார்’ என்று அழைத்தது எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. அன்றைக்கு சாமிக்கண்ணு என்ற நீதிபதியிடம் நான் வாதாடும் பொழுது இதே கருத்தை சொல்லி, ‘சார்’ என்று அழையுங்கள் என்று அவரே சொன்ன போது, நான் ‘சார்’ என்று நீதிபதி சாமிகண்ணுவை அழைத்தது உண்டு. இதெல்லாம் கடந்த கால சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
இன்றைக்கு ஒடிசா மாநில தலைமை நீதிபதி தன்னை ‘மைலார்ட்’ என்று அழைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதையெல்லாம் கடந்து வந்து, எத்தனையோ செய்திகளை பார்த்த மனிதர்களுக்கு பெரிதாக தெரியலாம். ஏற்கனவே ஒடிசா நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த காடி கிருஷ்ண மிஸ்ரா ‘சார் என்று’ அழைக்கலாம் என்று சொன்னதெல்லாம் நினைவில் உள்ளது. இதுபோல பல நீதிமன்றங்கள் இதுபோன்ற சர்ச்சை வந்தபொழுது நீதிபதிகளை ‘சார்’ என்று அழைக்கலாம் என்று சொன்னதெல்லாம் நினைவில் உள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் இது குறித்தான விவாதங்கள் நடந்துள்ளன. இது புதிதல்ல! சென்னை உயர்நீதிமன்றம் கூறிய இரண்டு கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் கூற்றின் படி, சென்னைப் பல்கலைக்கழகம் இன்றைக்கு அதன் நற்ப்பெயரை இழந்து வருகிறது. உண்மைதான். ஒரு உதாரணத்திற்கு சென்னைப் பல்கலைகழக வெளியீடுகள் ஒருகாலத்தில் அருமையாக, கட்டமைப்போடு வெளிவரும். ஆங்கிலம் தமிழ் அகராதி கூட நல்ல உட்கட்டமைப்போடு ஒரு காலத்தில் எ.லட்சுமணசாமி முதலியார் துணைவேந்தராக இருக்கும்பொழுது நேர்த்தியாக இருக்கும். இன்றைக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் வெளியீடுகள் கூட பேருக்கு, ஒப்புக்கு ஏற்றவாறு, பணம் செலவழிக்கிறார்கள் என்ற சூழலில் வெளிவருகின்றது. அதேபோல ஆய்வுமாணவர்களிடம் சரியான ஆய்வுக் கட்டுரைகளும், ஆய்வுரைகளும் மதிப்பீடு செய்வதும் இல்லை. அந்த ஆய்வுக் கட்டுரைகள் அருமையான ஆய்வுக்கட்டுரைகளாக வெளியிடுவது மில்லை. தரமும் குறைந்து விட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஊழல், நேர்மையற்ற நிர்வாகம் என்ற குற்றச்சாட்டும் எழுந்த வண்ணம் உள்ளன.
இரண்டாவதாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஒரு வியபார சந்தையாக, பணம் சம்பாதிக்கும் பல்கலைக்கழங்களாகத்தான் இருக்கின்றன. இதனால் சிலர் வாழ்கிறார்கள். அவ்வாறான பல்கலைக்கழகங்களில் கல்வித்தரம் இல்லை என்ற கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் சொல்வது உண்மை. இதை கவனிக்க வேண்டும்.
– கே.எஸ்.ராதாகிருஷ்ணன்