தமிழகம்

மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான மாவட்ட சீராய்வு குழுக்கூட்டம்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 06.01.2022 அன்று 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான மாவட்ட சீராய்வுக் குழுக் கூட்டம்(District Screening Committee) சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.விஜயா ராணி, இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

மேற்படி கூட்டத்தில் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை மருத்துவர்கள், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மற்றும் தனித்துணை ஆட்சியர், முன்னிலையில் மற்றும் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 வட்ட தனி வட்டாட்சியர்கள் ஆகியோருடன் நடைபெற்றது.

மேற்படி மாவட்ட சீராய்வுக் குழுக் கூட்டம் (District Screening Committee) உடலியக்கக் குறைபாடு (Locomotor Disability),, செவித்திறன் குறைபாடு (Hearing Impairment), குறை பார்வையின்மை (Low Vision), புற உலகச் சிந்தனை குறைபாடு (அ) மன இறுக்கம் (Autism Spectrum Disorder), மூளை முடக்குவாதம் (Cerebral Palsy), பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு (Speech and Language Disability), குள்ளத்தன்மை (Dwarfism), அறிவுச்சார் குறைபாடு (Intellectual Disability) போன்ற குறைபாடுகள் உடைய 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி சிறார்கள் சிறப்பு மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டனர். மேற்படி மாவட்ட சீராய்வுக் குழுக் கூட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட 129 மாற்றுத்திறனாளி சிறார்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button