விமர்சனம்

நடிகை மனோரமா சாதனையை நெருங்குகிறாரா கோவை சரளா ? “செம்பி” படத்தின் திரைவிமர்சனம்

ட்ரைடன் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ.ஆர். எண்டர்டெயின்மெண்ட் அஜ்மல் கான் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா நடிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ள படம்  “செம்பி”.

கதைப்படி… கொடைக்கானல் மலைக் கிராமத்தில் தனது பத்து வயது பேத்தி செம்பியிடன் ( நிலா ) வசித்து வருகிறார் வீரத்தாய் ( கோவை சரளா ). காட்டில் உள்ள மரங்களில் தேனை எடுத்து அடிவாரத்தில் உள்ள கடைத்தெருவில் உள்ள கடையில் கொடுத்து பணம் வாங்கி வரச்சொல்லி பேத்தியை அனுப்பி வைக்கிறார். காட்டுப் பாதையில் தேன் குடுவையிடன் செம்பி சென்றுகொண்டிருக்கையில் மூன்று வாலிபர்கள் அவளை வழிமறித்து செடிகளுக்குள் தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

இந்த சம்பவம் வீரத்தாய்க்கு சென்நாய் கடித்து விட்டதாக அந்தப் பகுதி சிறுவர்கள் தெரிக்க, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். பரிசோதித்த மருத்துவர் உன்மைமையை விளக்க அதிர்ச்சியில் உறைந்து விடுகிறார் வீரத்தாய். பின்னர் காவல்துறையினருக்கு தெரியப்படுத்துகின்றனர். தேர்தல் நேரம் என்பதால் இந்த சம்பவம் அரசியலாகிறது.

பின்னர் விசாரணை அதிகாரி பாலியல் குற்றவாளிகளை காட்டில் விலங்குகளுக்கு வைக்கப்பட்ட கேமரா மூலம் அடையாளம் காண்கிறார். அவர்கள் அரசியலில் முக்கியப் புள்ளியின் மகனும், அவனது நண்பர்களும் என்பது தெரியவருகிறது. அவர்களைத் தொடர்பு கொண்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு வீரத்தாயிடம் வழக்கை திரும்பப் பெறுமாறு வற்புறுத்துகிறார். அதற்கு சம்மதிக்க மறுத்ததால் வீரத்தாய் தாக்குதலுக்கு உள்ளாகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு அங்கிருந்து பேத்தி செம்பியிடன் அங்கிருந்து தப்பிச் செல்கிறார் வீரத்தாய்.

அதன்பிறகு இன்ஸ்பெக்டர் என்ன ஆனார் ? குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா வீரத்தாய் ? என்பது மீதிக்கதை…..

மலைக்கிராம பாட்டி கதாபாத்திரத்தில் ஒரிஜினல் கிராம வாசியாயாக வாழ்ந்திருக்கிறார் கோவை சரளா. அறியாத வயதில் பேத்தி செம்பி கற்பழிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் மருத்துவ மனையில் அங்குமிங்கும் அழைந்து கொண்டு கதறும் காட்சியில், படம் பார்க்கும் அனைவரையும் கண்களங்க வைக்கிறார் கோவை சரளா. கோவை சரளாவின் உழைப்பை பார்க்கும்போது மறைந்த மனோரமாவின் சாதனையை முறியடித்து விடுவாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பணபலமிக்க குற்றவாளிகளாக இருந்தாலும், நியாயத்திற்கு உதவ ஆயிரம் பேர் வருவார்கள் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர். பேச வேண்டிய இடத்தில் பேசாமல் அமைதி காப்பது ஆபத்தானது என்பதையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

படத்தில் நடித்துள்ள நடிகர்,  நடிகைகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர். செம்பியாக நடித்துள்ள நிலா அற்புதமாக நடித்துள்ளார்.

சமூகத்தில் சாமானியர்களின் வேதனையையும், அதற்கான தீர்வையும் தனது திரைக்கதை வெளிப்படுத்திய இயக்குனர் பிரபு சாலமனுக்கு நமது நாற்காலி செய்தி இதழ் சார்பாக பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button