உள்ளாட்சி தேர்தலில் மருத்துவர் அய்யாவுக்கு சிகிச்சை
நடந்து முடிந்த உள்ளாட்சி ஊரக தேர்தலில் மருத்துவர் அய்யா ராமதாசுக்கு மக்கள் தக்க சிகிச்சையை கொடுத்திக்கிறார்கள். 9 மாவட்டங்களில் பாமகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதாகவும் எனவே தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவோம் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சூளுரைத்தார்.
தேர்தலுக்கு தேர்தல் அணி தாவுவது மருத்துவர் ராமதாசின் அரசியல் பாணி. அதிமுகவினரை திமுக கூட நாகரிகமான வார்த்தைகளில் அரசியல்ரீதியாக விமர்சனம் செய்தது. ஆனால் ராமதாஸ் ஒருபடி மேலே சென்று அதிமுகவினரை ‘டயர் நக்கிகள்’ என்று மிகக் கேவலமாக பேசினார். அந்த டயர் நக்கிகளுடன் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலிலும் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் ராமதாஸ் கூட்டணி கண்டார்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என்று ராமதாஸ் அறிவித்தார். ஆனாலும் கட்சித் தலைமையில் ஆணையை மீறி சில மாவட்டங்களில் பாமகவினர் அதிமுகவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு தேர்தலில் போட்டியிட்டனர். ஆனாலும வடமாவட்டங்களில் திமுக அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. சிங்கத்தை அதன் குகைக்குள் சந்தித்து அதன் பிடரியை உலுக்கியுள்ளது திமுக.
மக்களவை பொதுத்தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என்று அடுத்தடுத்து தேர்தல் தோல்விகளால் துவண்டு போயுள்ளது பாமக. நாங்கள் இருக்கும் அணியே வெற்றி பெறும் என்று வீராப்பு பேசி வந்த மருத்துவர் அய்யாவுக்கு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தக்க சிகிச்சையை கொடுத்துள்ளனர்.
பாமக தேர்தல் பாதை
- 1989 சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு
- 1989 நாடாளுமன்ற தேர்தல் பாமக தனித்துப் போட்டி
- 1991 சட்டமன்றத் தேர்தல் தனித்துப் போட்டி. பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் வெற்றி.
- 1996 பாமக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி. 4 இடங்களில் வெற்றி.
- 1998 மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுக – பாஜகவுடன் கூட்டணி. பாமக 4 இடங்களில் வெற்றி. தலித் எழில்மலை மத்திய இணைஅமைச்சர்.
- 1999 மக்களவை பொதுத்தேர்தலில் பாமக – திமுகவுடன் கூட்டணி. 5 தொகுதிகளில் வெற்றி.
- 2001 சட்டமன்றத் தேர்தலில் பாமக அதிமுகவுடன் கூட்டணி.
- 2004 மக்களவை பொதுத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணி. அன்புமணி மத்திய அமைச்சரானார்.
- 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி
- 2009 மக்களவை பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி
- 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி
- 2014 மக்களவை பொதுத்தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி
- 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி. அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து மாற்றம் முன்னேற்றம் என்று அறிவித்து தேர்தலை சந்தித்தது பாமக. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
- 2019 மக்களவை பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி
- 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி.
இது பாமகவின் தேர்தல் வரலாறு.
ராமதாஸ் உதிர்த்த முத்துக்கள்
- பாமக இருக்கும் கூட்டணியே வெற்றி பெறும்.
- அதிமுகவுடன் கூட்டணி வைப்பது தாயுடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்கு சமம்.
- கார் உள்ளவரை கடல் உள்ளவரை பார் உள்ளவரை பைந்தமிழ் உள்ளவரை திமுக – அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை.
- திமுகவுடன் கூட்டணி வைத்தால் கலைஞர் கோவணத்தைக் கூட அவிழ்த்துவிடுவார்.
- ஜெயலலிதா ஒரு வெள்ளை பன்றி.
- தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட், டி சர்ட்டை அணிந்து கொண்டு கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு வன்னியப் பெண்களை காதலித்து ஏமாற்றுகின்றனர்.
- அதிமுகவினர் டயர் நக்கிகள்.
- பாமக ஆதரவு இல்லாமல் யாரும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது.