புதுக்கோட்டை சித்தன்னவாசலில் சீரழியும் இளம்பெண்களும் கவனமற்ற பெற்றோர்களும்…
புதுக்கோட்டையில் இருந்து 13 கி.மீ தொலைவில் அன்னவாசலின் அருகில் சித்தன்னவாசல் என்ற சுற்றுலாத்தலமொன்று உள்ளது. இங்குள்ள பழமை வாய்ந்த குகைக்கோயில்கள், சமணர் படுக்கைகள் பிரசித்தி பெற்றவை. இங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். இரண்டரை ஏக்கர் நிலத்தில் 10 அடி ஆழம் உள்ள செயற்கை குளம் ஒன்று உருவாக்கப்பட்டு படகு சவாரிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறுவர் பூங்கா, தமிழன்னை சிலை, மகாவீரர் சிலை ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. அதிநவீன முறையில் இசை நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையின்போது குடும்ப சகிதமாக சுற்றுலா பயணிகள் இங்கு அதிகளவில் வருவர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இங்கு குடும்பத்துடன் வந்து பொழுதை போக்கும் காலமெல்லாம் போய் இன்று பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் இளம்பெண்கள், மாணவிகள் காதலனோடு கடலை போடுகிற மற்றும் உறவு கொள்வதற்கான இடமாக மாறிவிட்டது.
18 வயதை கூட கடக்காத சிறுமிகள் காதலன் என்ற காமுகனோடு பஸ்ஸில் இறங்கி வந்து இங்கு செய்கிற அட்டூழியம் கொஞ்சமல்ல.
பல சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கல்வி பயில வரும் மாணவிகள் பள்ளிக்கூடத்தை பாதியில் கட் அடித்து விட்டு அல்லது அந்த நாள் முழுவதும் பள்ளி கல்லூரிக்கே செல்லாமல் ஒரு நாள் பொழுதை காதலனுடன் கழிக்கின்றனர் என்பது தெரிந்ததும் அதிகம் வருத்தமளிக்கிறது.
அங்கு கொஞ்சி குலாவ வந்த சில இளைஞர்களை பிடித்து விசாரிக்கும் போது தான் இன்னும் அதிர்ச்சிகரமான பல சம்பவங்களும் வெளிவந்துள்ளது.
கல்லூரி அல்லது பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகளை ஒரு நாளைக்கு ஒருவர் என மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்வதாகவும் தகவல் வந்துள்ளது.
காதலன் என்ற பெயரில் காமுகன்கள் பள்ளி கல்லூரி மாணவிகளிடம் “நீ தான் எனது உயிர், நீ இங்கு வராவிட்டால் இறந்து விடுவேன் என்றெல்லாம் “ ஆசை வார்த்தைகள் கூறி தன் இச்சைக்கு அடிபணிய வைக்கின்றனர்.
இது குறித்து அந்த பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “சீரழிந்து போவர்களிடம் கேட்கப்போனால், காவல்நிலையத்தில் உங்கள் மீதே புகார் கொடுத்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். அங்கு பணிபுரிபவர்கள் இதற்கு ஆதரவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
பெற்றோர்களிடம் பள்ளி கல்லூரிக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வருவதால் பெற்றோர்களுக்கு இது சம்மந்தமாக எந்த தகவலும் தெரியாததால் அவர்களும் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்காமல் விட்டுவிடுகிறார்கள். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தனது குழந்தைகளுக்கு ஆன்ட்ராய்ட் போன்களை வாங்கிக் கொடுப்பதால் அவர்கள் அந்த போன்களை அவசியத்துக்கு மட்டும் பயன்படுத்தினால் தவறு அல்ல. அதேபோனை தீயவழியில் பயன்படுத்தி தன் குழந்தைகளை தாங்களே கெட்டுப்போக காரணமாக இருக்கக்கூடாது.
வளர்ப்பிலும் கவனமில்லாமல், ஆன்ட்ராய்ட் போன்களையும் வாங்கிக் கொடுத்து பள்ளி கல்லூரிக்கு அனுப்பும் உங்கள் பிள்ளைகள் சீரழிந்து போவதை நீங்கள் தடுக்க நினைத்தால் இனியாவது முழு கண்காணிப்போடு இருங்கள்.
இங்கு வரும் இளைஞர்கள், இளம்பெண்களிடம் விசாரித்தால் அதில் பலரும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுக்கோட்டை, கீரனூர், கைக்குறிச்சி, அறந்தாங்கி, காரைக்குடி, திருமயம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக தொடர் புகார்களையடுத்து, அன்னவாசல் போலீசார் சித்தன்னவாசல் பூங்கா மற்றும் பொட்டல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். பின்பு அங்கு சுற்றி திரிந்த காதல் ஜோடிகளை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.