தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்த சென்னை மாவட்ட ஆட்சியர்
தமிழகத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.அந்த வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 5ஆம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் 1600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.
கோட்டூர் பொன்னியம்மன் கோயில் தெரு, சைதாப்பேட்டை வெங்கடாபுரம் பெருநகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேற்கு சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர் முனைவர்,ஜெ.விஜயராணி,இ.ஆ.ப., பார்வையிட்டார்.உடன் சென்னை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் ஜெ.யோகஜோதி, மாம்பலம் வட்டாட்சியர் சொ.க.குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.