சீமான் மருத்துவமனையில் அனுமதி, நடிகை பிரச்சினை காரணமா ?.!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அனுப்பட்டியில் செயல்பட்டுவரும் இரும்பு ஆலையினால் விவசாயத்திற்கும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், உடனடியாக ஆலையை மூடக்கோரி 168 வது நாளாக அனுப்பட்டியில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதனிடையே பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சீமானின் வருகைக்காக பொதுமக்கள் வெகு நேரம் காத்திருந்தனர். இதனிடையே சீமான் தாராபுரத்தில் நிகழ்சியை முடித்துக்கொண்டு பல்லடம் வழியாக அனுப்பட்டி அருகே காரில் வந்துகொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக கூட்டத்தை ரத்து செய்துவிட்டு சீமான் திரும்பினார்.
இந்நிலையில் சீமானின் முதல் மனைவி நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், இன்று விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பிறகு சீமானிடம் விசாரணை செய்து கைது செய்ய நேரிடலாம் என்பதால் சீமான் உடல்நிலை சரியில்லை என கூறி மருத்துவ மனைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கூட்டம் நடைபெற்ற இடத்தில் நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறும் போது சீமான் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துகொண்டிருந்தபோது உணவு சாப்பிட்டதில் திடீரென ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் அதனால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் மாலை திருப்பூரில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சீமான் கலந்துகொள்வாரா அல்லது மாட்டாரா என்பது மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்னர் தான் தெரியவரும் எனவும் தெரிவித்தார். அனுப்பட்டியில் சீமான் கூட்டம் ரத்தான அறிவிப்பு வெளியானதும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் வழி நெடுகிழும் கட்டப்பட்டிருந்த கட்சி கொடிகளை அவசர அவசரமாக கட்சி நிர்வாகிகள் கழற்றிச் சென்றனர்.