தமிழர் சித்த மருத்துவத்திற்கும் மத்திய மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் : தமிழ்நாடு சட்டகல்லூரி மாணவர்கள் சங்கத்தின் தலைவர் சுபாஷ்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழ்நாடு சட்டகல்லூரி மாணவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான சுபாஷ் கூறியிருப்பதாவது, “எந்த ஒரு நோய்களுக்கு தீர்வு தமிழர் சித்த மருத்துவமே.. ஆங்கில மருத்துவ முறைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை போல தமிழர் சித்த மருத்துவத்திற்கும் மத்திய மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆதிகாலம் முதல் இன்று வரை பெரிய பெரிய நோய்களுக்கு தீர்வு அளித்து இருப்பது தமிழர் சித்தர் மருத்துவம்.
குறிப்பிட்ட காலங்களுக்கு முன்னர் கூட டெங்கு காய்ச்சல் பெரும் சவாலாக இருந்தது அதனை கூட தமிழர் சித்த மருத்துவத்தின் நிலவேம்பு கசாயத்தின் மூலம் தான் சரி செய்ய முடிந்தது. அது போன்று நிச்சயம் தமிழர் சித்த மருத்துவத்தின் மூலம் இந்த கொரோனா வைரஸிலிருந்து மக்களை மீட்க முடியும். அதற்கு தமிழர் சித்த மருத்துவத்திற்கு மத்திய மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அது மட்டும் அல்லாது மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தமிழக அரசு வழங்கும் 1000 ரூபாய் போதுமானது இல்லை. குறைபட்சம் 5000 ரூபாய் வழங்க வேண்டும். நோய் கிருமியிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முக கவசம் உள்ளட்டவைகளை அரசு வழங்க முன்வர வேண்டும்.” என்றார்.
மேலும், அன்றாட பயிர் விளைவிக்கும் விவசாயத்திற்கு தடை விதிக்காமல் விவசாய பொருட்களை விவசாயிகள் வியாபாரிகள் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளிடம் தமிழ்நாடு சட்டகல்லூரி மாணவர்கள் சங்க தலைவர் சுபாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.