அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு : அதிர்ச்சியில் பழனிச்சாமி..!

அதிமுக பொதுச் செயலாளர் என்று சசிகலா உரிமை கோருவதற்கு எந்தவித அதிகாரமும் இல்லை என பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அறிவிப்பு செல்லாது என சசிகலா தரப்பில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை நிராகரிக்க கோரி பன்னீர் செல்வமும், பழனிச்சாமி தரப்பினர் வழக்கு தொடுத்திருந்தார்கள்.

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதித்துறையினர் வழக்கு விசாரணை முடிவை ஒத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமான முக்கிய ஆதாரம் வெளியாகி அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பன்னீர்செல்வம், முதல்வராக பதவி வகித்தார். அப்போது அதிமுக அமைச்சர்கள் ஒன்றிணைந்துதான் சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் என்ற பதவியை கொடுத்தார்கள். இதில் பன்னீர்செல்வத்தின் அனுமதியுடன்தான் சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு சசிகலா சிறைக்குச் சென்ற போது சசிகலாவின் கையெழுத்தின் காரணமாகத்தான் பழனிச்சாமி அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் உட்கார வைக்கப்பட்டார்.

அதன்பிறகு பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டி சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என அறிவித்தார்கள். அதே சசிகலா கையெழுத்திட்டுத்தான் பழனிச்சாமியை முதலமைச்சர் பதவியில் அமர்த்தினார். அப்படியே சசிகலா பொதுச்செயலாளர் இல்லை என்றால் இவர்களின் அறிவிப்பு பழனிச்சாமிக்கும் பொருந்தும்தானே. பழனிச்சாமியை தலைமைப் பொருப்பில் அமர முடியாது என தற்போது கூறப்பட்டுள்ளது. இதனால் பழனிச்சாமி அதிர்ச்சியில் உள்ளதாக கூறுகிறார்கள். சசிகலாவின் கையெழுத்து செல்லாது என்றால் பழனிச்சாமி எப்படி தலைமைப் பொறுப்பில் அமர முடியும் என்ற சசிகலாவின் அந்த கையெழுத்து தற்போது நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்பித்துள்ளார்.

இதன்காரணமாக மொத்த அதிமுக வட்டாரமும் அதிர்ச்சியடைந்துள்ளது. சசிகலாவின் கையெழுத்து ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நீடிப்பார். அப்போது பழனிச்சாமி அதிமுகவின் தலைமைப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் பழனிச்சாமி அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சசிகலா சிறைக்குச் சென்ற அந்த நாள் வரை பழனிச்சாமியை யாருக்கும் தெரியாது. சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்தாலும் கூட அவரது முகம் தமிழக மக்களுக்குத் தெரியாது. ஆனால் காலம் அவருக்கு அற்புதமான வாய்ப்பை வழங்கியது. அவராகவே பணத்தைக் கொடுத்து அந்த வாய்ப்பை பெற்றுக் கொண்டார் என்று கூறினாலும் அது வரலாற்றில் யாருக்கும் அமையாத வாய்ப்பு. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வேண்டுமெனில் எவ்வளவு உழைப்பு, எத்தனை களப்பணிகள், எத்தனை தியாகங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் இவற்றில் எதையுமே செய்யாமல் திடீரென பழனிச்சாமிக்கு அந்த பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

கடுமையான சூழ்நிலையில் விஞ்ஞானிகளும், அறிவு ஜீவிகளும் கொண்ட அதிமுக என்னும் கட்சியை தனி ஒருவராக பிரச்சாரம் செய்து ஓரளவு நிலைநிறுத்தியும் இருக்கிறார் பழனிச்சாமி என்றால் அது மிகையில்லை. தனது சொந்த தொகுதியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்குகளை நெருங்கி மாபெரும் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றதற்குப் பின்னால் சொந்தக்கட்சி, எதிர்கட்சி, வேண்டாத கட்சி என்கிற வேறுபாடு இல்லாமல் உதவி செய்ததுதான் காரணம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

எது எப்படியோ காலம் பழனிச்சாமிக்குத் தந்த மகத்தான வாய்ப்பை மக்களுக்காக பயன்படுத்தாமல் தனக்காகவும், தன் பதவிக்காகவும் பயன்படுத்திக் கொண்ட ஒரு அரசியல்வாதியாகத் தான் வரலாறு அவரை நினைவில் வைத்திருக்கும்.

சூரிகா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button