அரசியல்

தஞ்சையிலிருந்து மணிப்பூர் ஆளுநர் வரை : இல.கணேசனின் அரசியல் பயணம்

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து தொடர்ந்து ஆளுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலம் மற்றும் புதுச்சேரியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்த வரிசையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 76 வயதான இல.கணேசன் 1945ல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்.

அரசியல் ஈடுபாடு காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் அவரது அண்ணன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சிறுவயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது கொண்ட ஈடுபாட்டால் சமூகப்பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்து பின்னாளில் அவரை ராஜ்யசபா உறுப்பினர் பதவி வரை உயர்த்தியது. இளைஞராக இருந்த காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர்.

1970களில் நடைபெற்ற எமர்ஜென்சி கால கட்டத்தில் காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து சுமார் 1 வருட காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அந்த நாட்களில் தற்போதைய தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனுடன் நட்புறவில் இருந்துள்ளார். 1991ல் பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக பதவி வகித்தார். 2009, 2014ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார்.

2 முறை தோல்வியடைந்தாலும் பின்னர் மத்திய பிரதேசத்திலிருந்து ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு 2016ல் ராஜ்ய சபா உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். மத்தியில் திமுக நேச உறவாய் இருந்த காலத்தில் மறைந்த திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் கலைஞருடன் நட்புறவில் இருந்து வந்தார்.

பாரதிய ஜனதா கட்சியில் இல.கணேசன் கனிவானவர் என பெயரெடுத்திருந்தாலும் அவர் மீது சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. பாரதிய ஜனதா கட்சியின் 2020ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கிருபாநிதிக்கும், லெட்சுமணனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தலித் சமூகத்தை சேர்ந்த கிருபாநிதியை அவரது ஜாதியை குறிப்பிட்டு தாக்கினார் இல.கணேசன் என்ற குற்றச்சாட்டு உள்ளது. கட்சிப்பணத்தை இல.கணேசன் கையாடல செய்ததால் தான் அந்த மோசடி ஏற்பட்டதாக அப்போது பகிரங்கமாக குற்றம்சாட்டினார் கிருபாநிதி. இந்துக்களுக்கான கட்சியாக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்ட பாரதிய ஜனதாக கட்சி ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தலைமையை தேர்ந்தெடுத்த முதல் முயற்சி இவ்வாறுதான் தோல்வியில் முடிந்தது.

இல.கணேசன் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு 2014ம் ஆண்டு முதலே தொடங்கியது. 2020ம் ஆண்டு கூட அவர் புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்கிற செய்தி அரசல் புரசலாக வெளியானது. பின்னர் அந்த செய்தி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் இல.கணேசன். ஆளுநராக இல.கணேசன் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த மாநிலம் எதிர்கொள்ளும் தொடர் இயற்கை சீற்ற பிரச்சினைகள் அவருக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.

தஞ்சை நெற்களஞ்சியத்தில் இருந்து இந்திய வடகிழக்கிற்கு சென்றிருக்கும் இல.கணேசனுக்கு வாழ்த்துக்கள் நமது நாற்காலி செய்தி குடும்பத்தின் சார்பில்.

சூரிகா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button