கஜா புயலில் பாதிக்க பட்ட மக்கள் இயல்பு நிலை திரும்ப அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல்
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
“கஜா புயல் தாக்குதலில் நாகப்பட்டினம், வேதாரணயம், தஞ்சை மாவட்டம், பட்டுகோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களை பாதுகாக்க பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவுப் பகலாகப் பாடுபட்டு, நேர இருந்த ஆபத்துக்களை முடிந்த மட்டும் தடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.
தமிழக அரசு கஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்கள் நலனை முக்கியம் என்று சிறப்பு கவணம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களுக்கும், துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
புயலால் வேதாரணயம், பட்டுகோட்டை பகுதிகளில் உள்ள கிராமங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு குடிசைகள் வீடுகள் சேதம் அடைந்து உள்ளன மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் உடைந்துள்ளன. கஜா புயலால் உயிர்பலியாகியவர்கள் குடும்பத்தில் ஓருவக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
எனவே, கஜா புயலால் பாதிக்க பட்ட மக்கள் இயல்பு நிலை திரும்ப தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கஜா புயலில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.