திருப்பூரில் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடும் டாஸ்மாக் பார்கள்….
தமிழக அரசு கொரோனோ நோய் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தற்போது ஒரு சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இதுவரை எந்த ஒரு விதி விலக்கும் டாஸ்மார்க் கடை சார்ந்துள்ள பார்கள் செயல்படுவதற்காக வழங்கப்படவில்லை.
ஆனால் அந்த நிபந்தனைகளை காற்றில் பறக்க விட்டு வெளிப்படையாக அமர்ந்து குதுகலமாக மது அருந்த திருப்பூர் மாநகரைச் சுற்றி உள்ள பார்களில் மது அருந்துபவர்களுக்கு சொகுசு வசதிகளுடன் விற்பனை நடைபெற்று வருகிறது.சாப்பிடும் உணவுகள்,ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடுவதற்கும் ,வாங்கிச் செல்வதற்கும் கொரோனா பரவல் பயத்தில் பல்வேறு நிபந்தனைகளை பின்பற்றி வருகிறோம்.
ஆனால் பார்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன இது அந்தப் பகுதியில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் கவனிக்கவில்லையா? இல்லை கவனத்திற்கு செல்லவில்லை? என்பது கேள்விக்குறியாக உள்ளது. போலி மது விற்பனை, புகையிலை விற்பனை போன்றவற்றில் கெடுபிடி காட்டும் திருப்பூர் காவல் துறையினர்,டாஸ்மாக் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் தற்பொழுதைய வேண்டுகோளாக உள்ளது.
கார்வேந்தன்.