தலைதூக்கும் அரசியல் நாகரிகம்

நீண்ட காலத்திற்கு பிறகு முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அரசியல் நாகரிகம் தற்போது தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
எம்ஜிஆர், கலைஞர் காலத்தில் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் அரசியலில் எதிரெதிர் கருத்துக்களை கொண்டவர்களாக இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக தோன்றி நட்பு பாராட்டினர். எம்ஜிஆர் மறைவுக்குப்பின் இந்த அரசியல் நாகரிகம் காணாமல் போனது. ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலர் ஆனதும் எதிர்கட்சித் தலைவர்களை எதிரிக்கட்சித் தலைவர்களாக பார்பதையே கொள்கையாக வைத்திருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் இன்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி மற்றும் பண்ணீர்செல்வத்துடன் மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருகருகே அமர்ந்து ஆறுதல் கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தொடரட்டும் இந்த அரசியல் நாகரிகம்.