பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு : அதிகாரிகள் 4பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
சேலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர்கள் 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோருக்கு 2லட்சத்து10ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சேலத்தில் 2017 முதல் 2018 வரை பணம் வாங்கிக் கொண்டு ஏற்கனவே கான்கிரீட் வீடுகள் வைத்திருப்போர் உட்பட தகுதியற்ற பயனாளிகளை தேர்வு செய்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த புகார் குறித்து தாமாக முன் வந்து விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், முதற்கட்டமாக சேலம் மாவட்ட குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர்கள் ரவிக்குமார், ஜெயந்திமாலா, உதவி பொறியாளர்கள் சரவணன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.