தமிழகம்

சென்னை மாநகராட்சியை குறைகூறும் ஆர்.எஸ்.எம். ஃபுட் பிரைவேட் லிமிடெட் : உண்மை என்ன..?

கொரோனா பாதுகாப்பு மையங்களில் நோயாளிகளுக்கு, சென்னை மாநகராட்சி மூலம் உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த மையங்களில் உணவு வழங்கிய 6 நிறுவனங்களில் ஒரு நிறுவனம் மட்டும் அதாவது ஆர்.எஸ்.எம். ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மட்டும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உணவு வழங்கியதற்கு நிலுவைத் தொகையை வழங்க பணம் கேட்பதாக செய்திகள் வெளி வந்தது.

இது குறித்து விசாரித்ததில், ஆர்.எஸ்.எம். ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு வேண்டிய நிறுவனம். இந்த நிறுவனம் மாநகராட்சி அதிகாரிகள் யாரையும் மதிக்காமல் அமைச்சர் ஒருவரிடம் மட்டும் தான் பேசுவார்கள். அதிகாரிகள் ஆர்டர் செய்யும் எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையில் உணவு வழங்கியதாகவும், பில் கொடுத்து பணம் கேட்டிருக்கிறார்கள். நோயாளிகளின் எண்ணிக்கைய விட அமைச்சர் சொன்ன இடங்களுக்கும் உணவுகளை சப்ளை செய்து விட்டு மாநகராட்சியில் பணம் கேட்டால், மாநகராட்சி அதிகாரிகள் எப்படி பணம் வழங்குவார்கள் என்கிறார்கள். மார்ச் மாதம் வரை வேலுமணியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகாரிகளை மிரட்டி வந்தது இந்த ஆர்.எஸ்.எம். பிரவேட் லிமிடெட் நிறுவனம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வேலுமணி மீது உள்ள வெறுப்பை மாநகராட்சி அதிகாரிகள் மீது காட்டுவதாக தெரிய வருகிறது.

இது சம்பந்தமாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் விசாரித்ததில், மாநகராட்சி சார்பில் 2020 ஆண்டு சுமார் 51 இடங்களில் கல்லூரிகள், மாநகராட்சி கட்டிடங்கள், சென்னை வர்த்தக மையம், கே.பி. பார்க் குடிசை மாற்று வாரியம் ஆகிய இடங்களில் அறிகுறி இல்லாத, மற்றும் அறிகுறி குறைந்த, அறிகுறி உ:ள்ள நோயாளிகளை தங்க வைத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பரிந்துரைத்த உணவுப் பட்டியலின் படி கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு அளித்து பராமரிக்க சென்னை மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டது.

முதன் முதலில் சென்னை வர்த்தக மையத்தில் ஏப்ரல் 2020-ல் ஆர்.எஸ்.எம். ஃபுட் பிரைவேட் லிமெடெட் நிறுவனம் (RSM FOOD PRIVATE LIMITED) மாநகராட்சி ஆனையரை அணுகி ஆர்டர் கேட்டிருக்கிறார்கள். அதேபோல் சரவணபவன், மனோஜ் பவன் போன்ற பல்வேறு ஹோட்டல் நிறுவனங்களும் மாநகராட்சி ஆணையரை அணுகியிருக்கிறார்கள். சென்னை வர்த்தக மையத்தில் ஹோட்டல் சரவணபவன் மூலமும் மற்ற மையங்களில் ஆர்.எஸ்.எம். ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் போன்ற மற்ற நிறுவனங்களும் உணவுகளை வழங்கியுள்ளது.

கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்கியிருந்த நோயாளிகளுக்கு உணவு வழங்கிய அனைத்து நிறுவனங்களும் உனவு வழங்கியதற்கான விலைப் பட்டியலை அனைத்து மையங்களிலும் உரிய அலுவலர்களிடம் ஒப்புதல் பெறப்பட்ட ஆவணங்களுடன் இறுதி பட்டியலை சமர்பிக்க வேண்டும். இந்த தொகையை சமர்ப்பிப்பதற்கு முன்பாக மொத்த தொகைக்கு ஈடாக குறிப்பிட்ட தொகை முன்பணமாக உணவு வழங்கிய நிறுவனங்களுக்கு மாநகராட்சி வழங்கியிருக்கிறது. ஆர்.எஸ்.எம். ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் உள்ளிட்ட உணவு வழங்கிய நிறுவனங்களுக்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்கத்தில் எந்த ஒரு பணியையும் செய்வதற்கு முன்னர் அதற்கான நிர்வாக அனுமதி பெறப்பட வேண்டும் என்பது விதி. நிர்வாக அனுமதி பெறப்பட்ட பின்னர் அதில் உள்ள தொகைக்கு மட்டுமே பட்டியல் சமர்பித்து செலவு செய்ய முடியும். கொரோனா நோயாளிகளின் தாக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளி காலத்திற்கு தேவையான உணவிற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு பகுதி பட்டியலுக்கான முன் பணம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த பட்டியல் செலுத்துப்படும் பொழுது அனைத்து பில்களும் மையத்தில் உள்ள உரிய அலுவர்களால் சரிபார்க்கப்பட்டு உரிய நிர்வாக அனுமதி கோப்புகள் இறுதிப் பட்டியல் கணக்கு அலுவலரால் சரிபார்க்கப்பட்டு அதற்குரிய சரக்கு மற்றும் சேவை வரி, வருமான வரி போன்ற வரிகள் பிடித்தம் செய்த பின்னரே முழு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், ஆர்.எஸ்.எம். ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்த நடைமுறை சரி வர தெரியாலம், மொத்தமாக ஒவ்வொரு பட்டியலும் சமர்ப்பித்துள்ளார்கள். அதனைப் பார்த்து நிர்வாக அனுமதிக்கு தகுந்தவாறு சமர்ப்பிக்குமாறு பல முறை கூறியும் இதுவரை அந்த நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை என்றே தெரிய வருகிறது.

இதே போல் உணவு சப்ளை செய்த

  1. COOL CREAM MILANO PVT. LTD.,
  2. MANOJ BHAVAN ,
  3. J DILIP CATERS,
  4. OM SREE NARAYANA ENTERPRISES,
  5. HOTEL SOWMIYA INN

போன்ற நிறுவனங்களும் நிர்வாக அனுமதிக்குத் தகுந்தவாறு உரிய ஆவணங்களுடன் பட்டியல் சமர்பித்து இறுதிப் பட்டியல் தொகையையும் பெற்றிருக்கிறார்கள். இதே போல் மாநகராட்சிக்கு பல்வேறு பொருட்களை வழங்கிய நிறுவனங்களும் பட்டியல் தொகையை பெற்றுள்ளார்கள்.

இதுவரை சென்னை மாநகராட்சியின் கொரோனா பணிக்காக பணி செய்த அனைத்து நிறுவனங்களுக்கும் பகுதிப் பட்டியல் மற்றும் இறுதிப் பட்டியல் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எம். ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் போன்று யாரிடமும் எந்தப் புகாரும் இதுவரை பெறப்படவில்லை. மாநகராட்சியின் வழிமுறைகளை பின்பற்றி உரிய ஆவணங்களுடன் பட்டியல் சமர்ப்பிக்காமல் கால தாமதத்தை ஏற்படுத்தி அதை முற்றிலும் மறைத்து சென்னை மாநகராட்சியின் மீது உள்நோக்கத்துடன் அதன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் ஆர்.எஸ்.எம். ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்ததில் தெரிய வருகிறது.

சரியான நேரத்தில் சரியான ஆட்சி அமைந்துள்ளதால் இனி மாநகராட்சியையோ, தமிழக அரசையோ யாரும் ஏமாற்ற முடியாது என்பது தான் தற்போதைய நிலவரம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button