போடிநாயக்கனூர் சட்டமன்ற அண்ணா திராவிடர் கழகம் (அதிக திவாகரன் அணி) சார்பில் தேனி கர்ணன் போட்டியிடுகிறார். அதிக வேட்பாளர் கர்ணனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டு போட்டி யிடும் வேட்பு மனு உறுதி செய்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பின்னர் வேட்பாளர் கர்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது- நடக்கும் சட்ட மன்ற தேர்தலில் போடி தொகுதியை தேர்வு செய்தது எதற்காக என்றால் பல கோடி ஊழலுக்கு காரணகர்த்தாவாக இருந்துகொண்டு போடி தொகுதியையும் மக்களையும் ஏமாற்றி கொண்டிருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தை தோற்க் கடிப்பதற்காகவே போடி சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என்றும் எனது ஊர் கடமலை மயிலை ஒன்றியத்திலுள்ள வாலிப்பறையாகும்.
30 வருடமாகவே அதிமுக தவிர்த்து வேறு எதுவும் தெரியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா தொட்டு இரட்டை இலையையே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டு இருந்தோம் பின்னர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக 3 அணியாக உடைந்து திவாகரன் தலைமையில் உள்ள 3 வது அணியில் செயல்பட்டு வருகின்றேன்.
அதிமுகவின் மானத்தை காற்றில் பறக்க விட்டு ஊழல் கட்சி என பேச வைத்த ஒ.பன்னீர் செல்வத்தின் முகத்திரையை வெட்ட வெளிச்ச மாக்கி போடி தொகுதியிருந்து விரட்டவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என்றும். அ.தி.க, அமமுக என இரு அணிகளாக செயல்பட்டு வரும் இந்த நிலையில் ஓ.பி.எஸ்.ஸின் மெகா ஊழல்களை மக்கள் மன்றத்தில் வைத்து அதிமுக (ஓ.பி.எஸ். இ.பி.எஸ்) என்ற ஊழல் கப்பலை கடலுக்குள் மூழ்க வைக்க போடி தொகுதிகள் தெருத்தெருவாக பிரச்சாரம் செய்ய போவதாகவும் மேலும் கூறுகையில் கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள தும்மக்குண்டு, முறுக்கோடை, சிங்கராஜபுரம், கோம்பைத்தொழு, குமணன் தொழு போன்ற 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் 2000 க்கும் மேற்பட்டவர்கள் நான்கு தலைமுறைகளாக விவசாயக் கூலி வேலைகள் செய்து வாழ்ந்து வருகின்றனர். இங்கு சாலை வசதி இல்லை செல்போன் வசதி இல்லை கடந்த திமுக ஆட்சியின் போது சாலை அமைத்து கொடுத்ததுதான்.
கடந்த 10 வருடங்களாக சாலைகளை புதுப்பிக்காமல் பெரும் மோசமான நிலையில் மக்கள் படும் அவதிகளை ஓபிஎஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது மட்டுமல்லாமல். குறிப்பாக இப்பகுதியில் 2 ஏக்கர் 3 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறித்து ஆயிரம் காற்றாலைகளுக்கு மேல் உருவாக்கி தேனி மாவட்ட நிர் வாகத்திடமும் பஞ்சாயத்து நிர்வாகங்களிடமோ முறையாக அனுமதி பெறாமலேயே துணை முதல்வர் என்ற அதிகாரத்தினை பயன்படுத்திபல நிறுவனங்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு மின்சாரம் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஒரு மின் காற்றாலைக்கு பஞ்சாயத்துகளுக்கு 25 லட் சம் முதல் 14 லட்சம் வரையில் வரி கட்டாமலேயே வருவாய் இழப்புகளை ஏற்படுத்தி கபளீகரம் செய்து கடந்த 10 ஆண்டுகளாக வரி கட்டாமலேயே துணை முதல்வர் என்ற ஆணவத்திலேயே மறைமுகமான நிறுவணங்களுக்கு அனுமதி வழங்கி இரண்டாயிரம் கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளனர் ஓபிஎஸ் குடும்பம் . என கூறுவதோடு இப்பகுதி தற்போது அந்த இரண்டாயிரம் குடும்பங்களும் எவ்வித அரசுத் திட்டங்களும் அனுபவிக்க முடியாமல் செல்போன் சிக்னல் இல்லாமல் சாலை வசதி இல்லாமல் கடும் அவதியில் உள்ளனர்.
அந்த மக்களுக்கு ஓபிஎஸ் பட்டா கொடுக்க விடாமல் வனத்துறையை ஏவி விட்டு ஊரை விட்டு விரட்டவும் பெரும் துரோகம் செய்து வருகிறார்.என்றும் அவரை போடி சட்டமன்ற தொகுதியை விட்டு விரட்டு வதற்கான வேலைகளை துரி தமாக செய்து வருவதாகவும்.
ஊழல் அமைச்சர் என்ற பெயர் எடுத்த ஓ.பி.எஸ்.ஸின் அரசியல் வாழ்வுக்கு போடி தொகுதி மக்கள் பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்புவது உறுதி என்றும் அரசியல் வாரிசு என்று தி.மு கவை குறை கூறும் யோக்கிதை இவருக்கு இல்லை இவர் தனது குடும்பத்துடன் எம்.பி எம்.எல்.ஏ கட்சிக்கு பொறுப்பு என குடும்ப அரசியல் செய்து வருவதை யாரும் மறுக்க முடியாது.
இவரது சுய நலமும் சொத்துகளை காக்க எடுக்கும் நடை முறைகளை பொது மக்கள் கவனித்து வருவதாகவும் எனவே இவரை போடி சட்டமன்ற தொகுதியை விட்டு விரட்டுவது எங்களின் முதல் குறிக்கோள் என்று அதிரடியாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்…
– ராஜசிம்மன்