கள்ளச்சாரயம் குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டி ! மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய சார் ஆட்சியர் !

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உட்கோட்டத்தில் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டிகள் நடைபெற்றது.
பரமக்குடி உட்கோட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர், கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள், பொருளாதார இழப்பு, சமுதாயத்தில் நன்மதிப்பை இழத்தல், கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் கொடுக்கப்படும் தண்டனைகள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் தீமைகள் குறித்த கருத்துக்கள் அடங்கிய குறும்படங்கள், போட்டியில் இடம் பெற்றன. இதில் கமுதி அருகே கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த தியாகி தர்மக்கண் அமிர்தம் கல்வியியல் கல்லூரி, பரமக்குடி உட்கோட்ட அளவில் முதலிடம் பெற்றது.

இதனையடுத்து பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வழங்கினார்.