தமிழக மீனவர்களின் வாழ்தாரத்தை பறிக்கும் இலங்கை அரசு: ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க வந்ததாக கைது செய்ய பட்ட தூத்துக்குடி மாவட்டம். திரேஷ்புரம் மாப்பிளையூரணி. சுனாமி நகர். பகுதிகளை சேர்ந்த எட்டு மீனவர்களை இலங்கை கடற்படையால் கொடுர சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டு அவர்களுக்கு 60 லட்சம் அபாதாரமும் சிறை தண்டைனையும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து பறித்து வரும் இலங்கை அரசின் இத்தகைய செயலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டிக்கிறது.
தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல். படகுகளை பறி முதல் செய்தல். சிறையில் அடைத்தல். இலங்கை கடற்படையினரின் அராஜக போக்கை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.
இலங்கை கடற்படையால் கைது செய்து சிறையில் அடைக்கபட்ட தூத்துக்குடியை சேர்ந்த எட்டு பேரையும் இலங்கை அரசு விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்க பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்” என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.