தமிழகம்

வாழப்பாடி அருகே மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுக்கா, வேப்பிலைப்பட்டி காமராஜர் காலனியில் மாமனார் மருமகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அதற்கு கணவர்,மாமியார் உடந்தையாக இருந்ததாகவும் பெண் ஒருவர் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாமனார் பச்சை முத்து மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த பச்சை முத்து தலைமறைவாக இருந்த நிலையில் இன்று வாழப்பாடி காவல் துறையினர் பச்சை முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில் 3 மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கணவனும் மாமியாரும் வேப்பிலை பட்டியில் இருந்தது தெரிய வந்தது. கணவன் வெங்கடேஷ் அவ்வூரிலுள்ள முடி திருத்தும் கடையில் இருப்பதைக் கண்ட அப்பெண் அவனை சிறை பிடித்து வாழப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்தும் காவல் நிலையத்திலிருந்து யாரும் வரவில்லை. இந்நிலையில் ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அப்பெண்ணை மானபங்கம் படுத்தி காயங்கள் ஏற்படுத்தியுள்ளனர் பெண்ணின் தலைமுடியை அறுக்க முயற்சி செய்துள்ளனர் இதில் படுகாயம் அடைந்த அந்தப்பெண் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் வாழப்பாடி காவல் நிலையத்தில் உள்ளவர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக கூறினார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button