தமிழகம்

பல்லடம் அருகே 10 ஆண்டுகளாக பொதுமக்கள் போராட்டத்தை சுகாதரத்துறை கொண்டாடுகிறதா? : விருந்தினர்கள் வருகையை தவிற்கும் கிராம வாசிகள் குறித்த அதிர்ச்சி ரிப்போர்ட்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சுக்கம்பாளையம் ஊராட்சி. இங்குள்ள ஊஞ்சபாளையம் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் விசைத்தறி ஆகியவை இப்பகுதியின் பிரதான தொழிலாகும்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லடத்தை அடுத்த அவினாசிபாளையத்தில் தனியார் நிறுவனம் கோழிப்பண்ணை அமைக்க சென்றபோது அங்குள்ள பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து அங்கிருந்து ஊஞ்சபாளையத்தில் கோழிப்பண்ணை அமைத்தனர்.

இந்நிலையில் கோழிப்பண்ணையில் முட்டை கோழிகள் சுகாதாரமற்ற முறையில் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் கோழிகழிவுகளில் இருந்து உற்பத்தியாகும் ஈக்கள் திடீரென ஊஞ்சபாளையம் கிராமத்தில் ஆயிரக்கணக்கில் படையெடுக்க துவங்கியது. இதனால் வீடுகளுக்குள் உணவு மற்றும் குடிநீர் மற்றும் பால் உள்ளிட்டவைகளில் ஈக்கள் விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கோழிப்பண்ணை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களையும் பாதிப்புக்குள்ளான பகுதிகளையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பார்வையிடாமல் ரகசியமாக கோழிப்பண்ணைக்கு மட்டும் வந்து செல்வது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விசேஷ விழா காலங்களில் ஊஞ்சபாளையம் கிராம மக்கள் தங்களது உறவினர்களை அழைத்தால் ஈக்கள் தொல்லையால் வருவதை தவிர்க்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில் கோழிப்பண்ணையில் இருந்து உற்பத்தியாகும் ஈக்கள் படையெடுப்பு அதிகரித்ததை அடுத்து உச்சக்கட்டமாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாத நிலையில் பல்லடம் காவல் துறை மற்றும் வட்டாட்சியர் தேவராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் குருவம்மா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சந்தித்து சமாதானம் செய்தனர்.

பின்னர் கோழிப்பண்ணைக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர், ஆனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வீடுகளுக்கு கடைசி வரை அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொள்ளாமல் திரும்பி சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு நிரந்த தீர்வு ஏற்படுத்தாமல் கோழிப்பண்ணைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ரகசியமாக வந்து செல்வது பொதுமக்கள் போராட்டத்தை காரணம் காட்டி சுகாரத்துறை கொண்டாட்டம் நடத்துகின்றனரா என்கிற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மேலும் பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள் முடிந்த வரை போராடிவிட்டோம், இனி இப்பகுதியில் வாழவே முடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும், இதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் துணைபோவதாகவும் தெரிவித்தனர். மேலும் ஊரில் வசிக்க முடியாத நிலையில் வெளியூருக்கு தங்களது இருப்பிடத்தை மாற்றியுள்ளனர்.

பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களிடம் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அவர்களின் சாட்டை சுழன்று சுகாதாரமற்ற பல்லடம் சுகாதாரத்துறையை சுகாதாரமான துறையாக மாற்றி ஊரையும் மக்களையும் காப்பாற்றவேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button