எத்தனை வழக்குகள் போட்டாலும், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் கும்பல் !

சென்னை அம்பத்தூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், உதவி ஆய்வாளர் திலீப் குமார் உள்ளிட்ட போலீஸார், இரவு நேரத்தில் சென்னை மூலக்கடை சந்திப்பு பார்த் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டாடா ஏசி வாகனத்தை ( TN-22 DY 4663 ) நிறுத்தி சோதனை செய்தபோது, பொது மக்களுக்கு அரசு விநியோகம் செய்யும் இலவச ரேசன் அரிசியை அப்பகுதி மக்களிடமிருந்து, குறைந்த விலைக்கு வாங்கி ஆந்திர மாநிலம் நெல்லூரில் தரகர்களுக்கு அனுப்புவதற்காக, சுமார் 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகளை, புளியம் தோப்பு பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் ஆகியோர் அனுப்பி வைத்ததாக வாகன ஓட்டுநர் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர் ராமமூர்த்தி, சஞ்சய், சதீஷ் ஆகிய மூவரையும் கைது செய்ததோடு, வாகனத்தில் இருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகள் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவர் மீதும் மீது Cr No 38/2025 ன் கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரியை குறைந்த விலைக்கு வாங்கி, வெளி மாநிலங்களுக்கு கடத்துவதையே தொழிலாக செய்துவரும், கடத்தல் கும்பலை முற்றிலும் ஒழிக்க உணவுப்பொருள் வழங்கல் மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரின் அதிரடி சோதனைகள் கடத்தல் கும்பலுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
– கே.எம்.எஸ்