தமிழகம்

அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணை வெளியீடு

தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்கள் உள்ளிட்ட 3 பிரிவினருக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு விடுத்துள்ள அரசாணையில், கொரோனா தொற்றினால் பெற்றோரில் இருவரையும் இழந்தவர்களுக்கும், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும், தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பதவிகளுக்கான வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பகங்கள் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் நேரடி பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் முன்னுரிமை முறையினை மறுசீரமைப்பு செய்தலுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஆளுநர் அறிக்கையிலும், தொடர்ந்து மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையிலும் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர், ஆதரவற்ற கைம்பெண்கள், கலப்புத் திருமணத் தம்பதியர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு முன்னுரிமை வழங்க ஏற்கனவே ஆணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button