பத்திரிகையாளர்களை இழிவாக பேசிய விமர்சகர்கள் !
சமூக வளைதளங்களில் பத்திரிகையாளர்களை இழிவான வகையில் அவதூறு செய்து வரும் கிஷோர் கே சாமியை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்து செய்தனர்.
சமீபகாலமாக சமுக வலைதளங்களில் பத்திரிகையாளர்கள் , ஊடகங்கள் மீது அப்பட்டமான அறுவெறுக்கத்தக்க வகையில் அவதூறு பரப்பும் செயல்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக தனிமனித தாக்குதல்கள் மூலம் பத்திரிகையாளர்களை மிரட்டுவது தரக்குறைவாக எழுதி,பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் குடும்பத்தினர் படங்களை வெளியிட்டு மன உளைச்சல் தரும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.
பெண் பத்திரிகையாளர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்த கிஷோர் கே சுவாமி என்பவர் மீது, பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலிஸார்
பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் கிஷோர் கே ஸ்வாமி தலைமறைவானார்.
கிஷோர் கே சுவாமி மீது தற்போது வரை 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கிண்டியில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சியின் முதன்மை செய்தி ஆசிரியர் மற்றும் செய்தியாளர்கள் பற்றி மாரிதாஸ் என்பவர் நான்கு அவதூறு வீடியோக்களை பதிவிட்டு இருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து அந்த தொலைக்காட்சியின் நிர்வாகம் ஒன்றரைக் கோடி ரூபாய் நஷ்டயீடு கேட்டு வழக்குத் தொடர்ந்தது .
இந்த வழக்கு விசாரணையில் தனியார் தொலைக்காட்சி குறித்து அவதூறு செய்திகளை வெளியிட மாரிதாசுக்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம். அப்போது ஆதாரமற்ற செய்திகளை தனிநபர் ஒருவர் வெளிடக் கூடாது என நீதிமன்றம் மாரிதாசை கண்டித்தது .
மேலும் இந்த வழக்கு தொடர்பாக மாரிதாஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஆகஸ்டு 12ஆம் தேதி க்கு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
பத்திரிகையாளர்கள் மீதும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினர் மீதும் தனிமனித விமர்சனம் செய்து இழிவான விளம்பரம் தேடிக்கொள்ளும் நபர்களை கண்டறிந்து நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பத்திரிக்கையாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
அ.ராபர்ட் ராஜ்