இன்னர் வீல் சங்கம் சார்பில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் திருநங்கைகளுக்கு சமையலுக்குத் தேவையான மளிகை பொருட்கள்…!
பரமக்குடியில் வாழ்வாதரம் இழந்து தவிக்கும் திருநங்கைககளுக்கு இன்னர் வீல் சங்கம் சார்பில் சமையலுக்குத் தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மற்றும் சுற்றுப் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிடிக்கப்பட்டதால் பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரம் இழந்து அன்றாடம் குடும்பம் நடத்தவே கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சேவையாக இராமநாதபுரம் இன்னர்வீல் சங்கம் சார்பில் சமையலுக்குத் தேவையான அத்தியாவசிய மளிகைபொருட்களை வழங்கி வருகிறார்கள்.
இதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கத்தின் தலைவி கவிதா செந்தில்குமார் தலைமையில் பரமக்குடி அருகே லீலாவதி நகரில் வசிக்கும் தினசரி வருமானம் பார்த்து குடும்பம் நடத்தி , இன்று முற்றிலும் வருமானம் இழந்து தவிக்கும் திருநங்கைகளுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. அதில் கொண்டை கடலை , துவரம் பருப்பு , கடலை பருப்பு , உள்ளிட்ட பருப்பு வகைகள், சேமியா சீரகம் ,சோம்பு ,ரவை , கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 15 வகையான வீட்டு உபயோக மளிகை பொருட்கள் இருந்தது .
இந்நிகழ்வில் ராமநாதபுரம் சமூக நலத்துறையின் மோகனப்பிரியா மற்றும் மங்கையர்க்கரசி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கு முன் திருப்புல்லாணி, மண்டபம் பகுதியில் உள்ள மீனவ விதவைப் பெண்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் , ஊனமுற்றேர் உள்ளிட்ட. குடும்பத்தினர்களுக்கும் வழங்கபட்டது .
இதுவரை 250 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு வீடு வீடாகச் சென்று வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
செய்தியாளர் ராஜா.