விலைவாசிகள் உயரும் அபாயம்! : சகஜ நிலை வரும் வரை சுங்கச்சாவடிகளை மத்திய அரசு திறக்க கூடாது! தமிழக ஆம்ஆத்மிகட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் வலியுறுத்தல்!!
தமிழக ஆம்ஆத்மிகட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கொரோனா வைரஸ் பரவலால் உலகமே அதிர்ந்து போய் உள்ளது. உலகில் லட்சக்கணக்கானவர்கள் இதனால் பாதிப்புக்குள்ளாகியும், லட்சத்திற்கும் மேலானவர்கள் உயிரிழந்தும் உள்ளனர் இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிப்புக்குள்ளாகியும் 300க்கு மேற்ப்பட்டவர்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்த தொற்று பரவாமலிருக்க மக்கள் அனைவரும் வீட்டிலியேலே இருந்து வருகின்றனர், கடந்த மார்ச் மாதம் 24 முதல் ஏப்ரல் 14 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது அறிந்ததே.
மத்திய மாநில அரசுகள், பிரதமர், முதல்வர், சுகாதாரதுறை, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாட்கள், காவல்துறையினர் அரசியல்கட்சிகள், சமூக அமைப்பினர் என அனைத்து தரப்பினரும் இந்த கடும் கொரோனா நோயிலிருந்து மக்களை காப்பாற்றிட கடுமையாக போராடி வருகின்றனர் மறுபுறம் ஊரடங்கால் மக்கள் பெரும் பொருளாதார சிக்களில் மிகவும் மாட்டி தவித்து வருகின்றனர். தமிழக அரசும் கடைகளில் காய்கறி, மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க வழிசெய்துள்ளது. அனால் துரதிருஷ்டவசமாக மத்திய அரசு 20/4/2020 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யபடும் என்று அறிவித்துள்ளது மிகத்தவறு.
(உ:ம்) மகாராஷ்டிராவிலிருந்து சென்னை வரை சரக்குடன் வரும் லாரிக்கு சுங்க கட்டணமாக சுமார் ரூ7500 வரை வசூலிக்கப்படும் பின்னர் காலி லாரி திரும்ப செல்ல மீண்டும் ரூ7500 வசூலிக்கபடும் இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே வருவாய் இல்லாமல் உணவிற்கே மக்கள் கஷ்டபட்டு வரும் இந்நிலையில் விலைவாசிகள் உயர மத்திய அரசே காரணமாக இருப்பது மிகவும் வருந்ததக்கது கண்டிக்கதக்கது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி திரு பழனிசாமி அவர்கள் மத்திய அரசுடன் பேசி உடனடியாக சுங்க கட்டண வசூலை தடுத்து நிறுத்திட வேண்டும் என தமிழக ஆம்ஆத்மிகட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.