சினிமா

சந்திரமுகி -2 படத்திற்காக தனது உடலமைப்பை மாற்றிய “ராகவா லாரன்ஸ்”

நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி -2 படத்திற்காக நடிகர்கள் கமல்ஹாசன், சீயான் விக்ரம் பாணியில் தன்னுடைய உடலை மெருகேற்றும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனை தெரியப்படுத்தும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் சிவாவிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இதோடு அவர் நடத்தி வரும் லாரன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் ( Larencce Charitable trust) க்கு இதுவரை நன்கொடை அளித்து வந்த நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, இனிமேல் யாரும் நன்கொடை வழங்க வேண்டாம். நான் தற்போது நல்ல நிலையில் இருக்கிறேன். எனக்கு தற்போது நிறைய பட வாய்ப்புகள் வருகிறது எனக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது…

இனிமேல் மக்களுக்கு சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே லாரன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் ( Larencce Charitable trust) க்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். நன்கொடைகள் அனைவரது ஆசிர்வாதம் மட்டும் போதும். இத்தனை வருடங்களாக நான் பெற்ற அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

எனக்கு ஆதரவளித்த ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்கிறேன். அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button