தமிழகம்

காணும் பொங்கல் : விளையாட்டு போட்டிகள்

காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோன்று சுற்றுலா தலங்களிலும் அதிக அளவில் பொதுமக்கள் கூடி காணும் பொங்கலை கொண்டாடினர்.

திருவாரூரில் காணும் பொங்கலையொட்டி ஆரூரான் விளையாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற போட்டிகள், நீச்சல் விளையாட்டுடன் போட்டிகள் தொடங்கின. அதைதொடர்ந்து, ஓட்டபந்தையம், மினி மாரத்தான், ரேக்ளா பந்தயம் போன்ற போட்டிகளும் நடைப்பெற்றன. வீரர்களை உற்சாகப்படுத்தியதோடு ஏராளமான பொதுமக்கள் இப்போட்டிகளை பார்த்து ரசித்தனர்.

காரைக்குடி அருகே மானகிரியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், மாட்டு வண்டிகள் ஒன்றை ஒன்று முந்தி சென்று, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

வடசென்னையின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான, காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையில் ஆயிரகணக்கான பொதுமக்கள் குவிந்தனர். வீட்டில் இருந்து எடுத்து வந்த கரும்பு, தின்பண்டங்களை பரிமாறி குதுகலத்துடன் ஆரவாரமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

பரமக்குடியில் வைகை ஆற்றங்கரை அருகில் உள்ள பாண்டியன் தெரு பொதுமக்கள் கடந்த 42 வருடங்களாக காணும் பொங்கலை சிறப்பாக கொண்டாடினர். அதேபோல் இந்த ஆண்டும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் போட்டி, பெண்களுக்கு கோலப் போட்டி, சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டி போன்ற போட்டிகளை நடத்தி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அந்தவிழாவில் G.S.சிட்டி அதிபர் சிகாமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி விழாவை சிறப்பித்தார். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதால் அந்த பகுதி முழுவதும் பொங்கல் விழா களைகட்டியது.

வேலூர் மாட்ட காவல்துறை சார்பில் குடியாத்தத்தில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பானையில் பொங்கலிட்டு காவலர்கள் பொங்கல் விழா கொண்டாடினர். விழாவில் உறியடித்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி போன்ற விளையாட்டுக்களும் நடத்தப்பட்டன.

இதே போன்று திருப்போரூர், சிதம்பரம், திட்டக்குடி, மதுராந்தகம், வந்தவாசி போன்ற பல இடங்களிலும் காணும் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button